பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பொருட்பால் யாயின், அவன்தடம்புரண்ட புகைவண்டியாகி விடுகிருன். அவனே மானம் உடையவன் என்று எவ்வாறு உலகம் மதிக்கும் மானங்கெட்டவனே' என்று வையத்தான் செய்யும். அடுத்தது, அல்லவை நீக்கும் மானம் உடைமையாம். கல்லவை என்னும் சொல்லின் எதிர்மொழியே அல்லவை என்பது, அதாவது தீயவை என்று பொருள். இச் சொல் வழக்கை, " நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தல் ஒம்புமின் ' என்னும் புறநானூற்று (195) பாடற் பகுதியாலும் உணரலாம். அரசன் தான்மட்டும் அறநெறி பிறழாது கடைப்பிடித்தால் போதாது அற நெறி யல்லாத தீமைகளைத் தன் நாட்டினின்றும்-நாட்டு மக்களினின்றும் நீக்க வேண்டும். ஒரு நாட்டு மக்களிடை தீய எண்ணங்களும்-தீய செயல்களும் கிறைந்திருப்பின், உலகம் அங்காட்டின் தலைவனேக் காறித் துப்பி எள்ளி நகையாடும். எனவே, மானம் விரும்பும் அரசன், நல்லற நெறிகளைத் தான் கடைப்பிடிப்பதோடு காட்டிலும் நிலை நாட்டவேண்டும். J இங்கே ஒரு கதை நினைவிற்கு வருகிறது. இரண்டு நாட்டு முதல்அமைச்சர்கள் ஓரிடத்தே எதிர்ப்பட்டன ராம். ஒருவர் மற்றவ்ரிடம், "எங்கள் காட்டில் மருத்துவ மனைகளும், நீதி மன்றங்களும், சிறைச்சாலைகளும் வேலை யின்றிக் கிடக்கின்றன” என்ருராம். அதாவது அவர் காட் டில் நோயாளிகளோ குற்றவாளிகளோ இல்லை என்பது பொருள். இதனைக்கேட்ட அடுத்த அமைச்சர், எங்கள் நாட்டில் மருத்துவ மனேயோ-சிறைச்சாலேயோ இல் லவே யில்லை” என்று அவரிடம் சொன்னராம். இதுதான் 'அல்லவை நீக்குதல்' என்பது. அடுத்தது மறனிழுக்கா மானம் உடைமையாகும் ; அதாவது வீரங்குன்ருத மானம். வீரங்குன்றில்ை மானம்