பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் - இல்வாழ்க்கை 4 வழி எஞ்சல் இல் "பழியஞ்சிப் பாத்துண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்." (பதவுரை) வாழ்க்கை = (திருவனுடைய) இல் வாழ்க்கையானது, பழி அஞ்சி = (பொருள் தேடுதல் முதலியவற்றில் உண்டாகும்) பழிக்கு அச்சப்பட்டு, பாத்து = (அப்படி நல்லவழியில் வந்த செல்வப்பயனைப் பலர்க்கும்) பகுத்துக் கொடுத்து, ஊண் =(தானும்) உண்ணு தலை, உடைத்தாயின் = உடையதாக இருக்குமேயானல், வழி க. (அங்நல்வாழ்க்கையின்) தொடர்ச்சி, எஞ்சல் = அற்றுப்போதல், எஞ்ஞான்றும் இல் = எப்பொழுதும் இல்லை. (பாத்தல் = பகுத்தல்; எஞ்சுதல்=அற்றெழிதல்) ( மண-உரை இல் வாழ்க்கையாகிய நிலை பழியையும் அஞ்சிப் பகுத்துண்டலையும் உடைத் தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத்தினும் இல்லை. ( பரி-உரை ) பொருள் செய்யுங்கர்ல் பாவத்தை அஞ்சி ஈட்டி அப்பொருளே இயல்புடைய மூவர் முதலாயினர்க்கும் தென்புலத் தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலே ஒருவன் இல் வாழ்க்கை உடைத் தாயின், அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தல் இல்லை. (ஆராய்ச்சி விரிவுரை) கெட்ட வழியில் பணம் தேடி லும், தான் மட்டுமே உண்ணினும், உலகம் பழிக்கும் என்று அஞ்சி, நல்ல வழியில் தேடி, அதனைப் பலர்க்கும் பகுத்துக்