பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகையணங்குறுத்தல் 3. வள்ளுவர், மற்ருே.ரிடத்தில் கண்ணுேட்டம்' என் னும் தலைப்பில், கண்ணேப் பற்றிப் பத்துக் குறள்கள் இயற்றியுள்ளார். அங்கே, இனிய பார்வை - இரக்கப் பார்வை, அன்புப் பார்வை-அருள் பார்வை உடையது தான் கண் எனப்படும்; கண் என்ருல் கண்ணுேட்டம் அதாவது இரக்கம் என்றெல்லாம் கருத்தமைத்து வைத் துள்ளார். உலக வழக்கில் கூட, 'உனக்குக் கண் இல்லையா?” என்கின்றனரே! கண் இல்லையா என்ருல் இரக்கம் இல்லையா என்பதுதானே பொருள்! உண்மை நிலைமை இப்படி யிருக்க, இந்தப் பேதைப் பெண்ணின் கண்களோ, இயற்கைக்கு எதிர் மாருயுள் ளன-அதாவது-பார்த்தவரது உயிரைப் பருகுகின்றன. இதுதான் இக்குறளின் கருத்து. இதனுள் இன்னுஞ் சில நயங்கள் இருக்கின்றன: இவளோ பெண் தகைப் பேதையாவாள். பெண் தகை என்ருல் பெண் தன்மை-அதாவது விரும்புதற்குரிய தன்மை - அன்புக்குரிய தன்மை. அன்பு என்னும் பண்பு இருக்கவேண்டிய இடத்தில் கொலே புரியும் வன்பு உள்ளதே ! இது இயற்கைக்கு மாறுதானே ? மேலும், பேதை என்ருல், ஒன்றும் அறியாத இளஞ் சிறுமி என்பது பொருள். பெண்களின் பருவ நிலையை ஏழாகப் பிரித்துள்ளனர் ஆன்ருேர் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்பன அவை. இவற்றுள் பேதைதான் முன் கிலே. ஐந்து வயதுக்குமேல் ஏழு வயது வரையும் பேதைப் பருவம் எனக் கணக்குஞ் செய்துள்ளனர். எனவே, பேதை என்ப வள் ஒன்றும் அறியாத இளஞ் சிறுமி என்பது இப்போது நன்கு விளங்குமே! பேதை என்பதற்கு அறியாமை என்ற பொருளும் உண்டு. இனி குறளுக்கு வருவோம். இவள்