பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 காமத துபபால யாரோ வந்திருக்கிருர் என இறந்துபோன - அதாவது கடந்துபோன, எச்சமாய் உள்ள-அதாவது மறைந்திருக் கிற மற்ருெரு கருத்தையும் தழுவுகிற 'உம்' தான் இறங் தது தழுவிய எச்ச உம்மை (உம்) எனப்படுவது. எனவே கண்ணுரும் அஞ்சுவர் என்ருல், இன்னும் யாரோ அஞ்சி யுள்ளார் என மனத்திற் கொண்டு, போர்க்களத்தில் வங்த பகைவர் அஞ்சுவதல்லாமல், வாராத பகைவரும் அஞ்சுவர் என்று பரிமேலழகர் கூறியுள்ளார். தமிழில் 'கண்ணுர்’ என்ற சொல்லுக்கு இஃதன்று பொருள். அதாவது, கண்ணுபவர்-கண்ணுதவர் என்ருல், போர்க் களத்தில் வருபவர்-வராதவர் எனல் தமிழ் மரபு அன்று. கண்ணுபவர்-கண்ணுதவர் என்ருல், வந்து நட்பு கொள்பவர்-கொள்ளாதவர் எனலே சரி. எப்போதுமே பகைவன் அஞ்சமாட்டான். அவ்வாறு அஞ்சுபவன் பகைவனகமாட்டான். தன்னல் முடியாவிட் டாலும் பகைவன் பணியமாட்டான். அஞ்சுபவனே பணிவான் - பணிபவனே அஞ்சுவான் - அடிமையே அஞ்சுவான். ஆல்ை, கண்ணுரும் உட்கும் பீடு என்பது குறட் பகுதி. இங்கே கண்ணுரும் என்பதிலுள்ள 'உம்' 'உயர்வு சிறப்பு உம்மை யாகும். அதாவது, அஞ்சாத உயர்ந்த சிறப்புடைய பகைவரையும் அஞ்சி வெட்கித் தலைகுனியச் செய்கின்ற அவ்வளவு பெரிய பீடு எனப் பொருள் கொள்க. கண்ணுரும் உட்கும் பீடு என்பது, 'குறவரும் மருளும் குன்று' என்பது போன்ற தொடர் என்பதைப் பரிமேலழகர் உணராவிடினும், இலக்கணங் கற்ற ஏனையோராயினும் உணர்க. மேலும், இங்கே உட்கு தல் என்ருல், வெறும் பணிவு.அச்சம் அன்று; தன் முடி யாமைக்கு காணித் தலை குனியும்படியான தோல்வி யச்சமே உட்குதல் ஆகும். அடுத்து, பீடு' என்னும் சொல்லுக்குப் பொருள் காண வள்ளுவர்அகராதி'யையே புரட்டுவோம். வள்ளுவர் மற்ருே.ரிடத்தில் ஏறுபோல் பீடு நடை என்றுள்ளார். ஏறு = ஆண்சிங்கம். ஆண்சிங்கம் போன்ற பெருமித நடை என்பது அதன் பொருள். எனவே, அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஆண்பிள்ளை சிங்கம் ஆகிய தலைமகன், ஒருத்தியின் நெற்றியழகுக்குத் தன் ஆண்மையைக் கோட்டை விட்டுவிட்டான், என்பது புலகிைறது.