பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---

226 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

4. 606/E/65-60 (Large Intestine)

பெருங்குடல் என்பது, எப்பொழுதும் கழிவுப் பொருள் அகற்றும் உறுப்பு என்பது யாவரும் அறிந்ததே.

தேகத்தில் உள்ள.செல்கள் உண்டாக்குகிற கழிவுப் பொருட்களை அகற்றும் பணியில் பெருங்குடல் ஈடுபடா விட்டாலும், முக்கியமான கழிவுப் பொருளான மலத்தை வெளியேற்றும் பொறுப்பில், அது சிறப்பான பணியாற்றிக் கொண்டிருக்கிறது. - -

அதிகமாக, கழிவகற்றும் வேலைக்கே, அது அர்ப் பணிக்கப்பட்டிருக்கிறது.

5. *@65oG (Liver)

ஜீரணத்தின் போது, கல்லீரலின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இரத்தத்தில் சேர்கிற கழிவுப் பொருட்களை இது அகற்றும் பணியில் ஆட்சி செய்து வருகிறது. -

அதாவது, வயிற்றில் புரதம் ஜீரணிக்கப்படுகிறபோது, அமோனியா என்கிற நச்சுப்பொருள் உண்டாகிறது. கல்லீரல் அதில் தலையிட்டு, அமோனியாவை, யூரியாவாக மாற்று கிறது.

இந்த யூரியா மற்றும் உப்புக்கள், சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுகின்றன.

குடல்களிலிருந்து அசுத்த இரத்தம், இதயத்திற்குக செல்வதற்கு முன்பாக, கல்லீரலுக்குத்தான் போகிறது. அங்கு அதிலுள்ள நச்சுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன. அதன் பிறகே அது இதயத்திற்குச் செல்கிறது. t

எனவே, கல்லீரலும் கழிவு மண்டலத்தின் ஒரு கவர்ச்சி மிக்க உறுப்பாக இருந்து, காரியமாற்றிக் கொண்டிருக்கிறது