பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 37

எலும்புகள். முள்ளெலும்பு (Vertabra), கணுக்கால் (Tarsus), மணிக்கட்டு (Carpus) போன்ற எலும்புகளைக் கூறலாம்.

3. தட்டையான எலும்புகள் (Flat Bones)

மண்டை ஒடு, மார்பு எலும்பு, விலா எலும் பு போன்றவை தட்டையான எலும்புகளுள் அடங்கும்.

4. cuuqazuoggo srgyub Lyssir (irregular Bones)

முதுகெலும்பு, தண்டுவடம் இவற்றில் உள்ள எலும்புகள் வடிவமற்றவையாக விளங்குகின்றன.

எலும்புகளின் வளர்ச்சி

எலும்புகளின் வளர்ச்சியை மூன்று நிலைகளாகக் குறித்துக் காட்டுவார்கள். அவை படல நிலை, குருத்தெலும்பு நிலை, எலும்பு நிலை.

பெரும்பாலான இணைப்புத்திசுக்களை உருவாக்கும் கருத்திசுவுக்கு மீசன்கைம் என்று பெயர். இந்த மீசன் கைம்மின் செறிவுகள் பல இட்ங்களில் தோன்றி, கருவினுள்ளே முதல் எலும் புக் கூட்டை உருவாக்குகிறது. இதற்குப் பட எலும்புக்கூடு என்று பெயர். -

இரண்டாவது மாத மத்தியில், படல எலும்பான மீசன் கைம், கபால நிறக் குருத்தெலும்பாக மாறுகிறது. எலும்புக் கூட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு காலக்கட்டங் களில் நடைபெறுகிறது. இந்த இரண்டாவது நிலையையே குருத்தெலும்பு நிலை என்கிறார்கள். -

இரண்டாவது மாத இறுதியிலோ, மூன்றாவது மாதத் தொடக்கத்திலோ, குருத் தெலும் புக்கூடு, முழுமையான எலும்பாக மாறுகிறது.

இதையே எலும்பின் வளர்ச்சி என்று அறிகிறோம்.