பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o:

தேகத் தைத் தெரிந்து கொள்வோம் 51

மார்புக் கூட்டின் உள்ளே மிக மூக்கியமான உள்ஸ்ரீப் புக்கள் பத்திரமாகப் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதயம், நுரையீரல்கள், மூச்சுக்குழல் (Trachea), உணவுக் குழல் (Oesophagus); பெரிய இரத்த நாளங்கள், நரம்புகள் போன்றவைகள் மார்புக் கூட்டிற்குள்ளே இடம்

பெற்றிருக்கின்றன.

குழந்தையின் மார்புக் கூடு பிரமிட் போன்ற அமைப் பைப் பெற்றிருக்கிறது. குழந்தை வளருகிறபோது, மார்புக் கூட்டின் வடிவமும் மாறிப் போகிறது.

ஆணின்மார்புக் கூட்டை விட, பெண்ணின்மார்புக் கூடு சிறிதாக இருக்கிறது. ஆணின் மார்புக் கூட்டைவிட, பெண்ணின் மார்புக் கூட்டின் மேற்புறம் அகலமாக இருக்கிறது.

ஆண் - பெண் எலும்புக் கூட்டின் வேறுபாடுகள்

பெண்களின் உடலமைப்பு, பிள்ளைப்பேற்றை முதன்மையாகக் கொண்டு அமையப் பெற்றிருப்பது என்கிற குறிப்பு, நமக்கு எளிதாகவே புலனாகின்றது.

கர்ப்பமான பெண்ணானவள், சுலபமாகப் பிரசவிக்கின்ற வகையில், அவளது உடற்கட்டு அமைந்திருக்கிறது.

சிறுவர்கள் சிறுமிகள் இளம் வயதில் ஒரே உடல் அமைப்புக் கொண்டவர்கள் போல உலாவினாலும், 13,14 வயதுக்குப் பிறகு, பெண்ணின் உடலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு, தனியாகப் பிரித்துக் காட்டி விடுகின்றன.

நாம் இங்கே கூறப்போகிற இன வித்தியாசங்கள், ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழ்கின்ற ஆண் பெண்ணுக்கு இடையிலே இருப்பதைத் தான். ஏனென்றால், ஒரு நாட்டின் இயற்கை அமைப்பு, தட்பவெப்ப நிலை, உணவு முறை,