பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 53

7. இடுப்புக்கு முன்புறமாக அமைந்துள்ள பியூபித வளைவானது (Pnbic Arch) ஆண்களுக்கு 90%க்கு குறைவாகவும். பெண்களென்றால் 90க்கு அதிகமாகவும் அமைந்திருக்கும்.

இப்படிப்பட்ட - ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டே பிரேத பரிசோதனையில், மருத்துவர்கள் வெற்றி கரமாக பால் வேறுபாட்டைக் கண்டறிந்து விடுகின்றனர்.

- இனி உடலிலுள்ள மூட்டுக்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

epco Gooch (Joints)

மனித உடலின் எல்லா எலும்புகளும், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. இரண்டு

அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட எலும்புகள் ஒன்று சேர்கின்ற இடத்திற்கே மூட்டு என்று பெயர்.

ஒன்று சேர்கின்ற இடத்தையும், அந்த எலும்புகளின் அசைவுகளையும் பொறுத்து, அதை நாம் 3 வகையாகப் பிரிக்கலாம் -

இரு எலும்புகள் கொண்ட மூட்டை, எளிய மூட்டு என்றும்; பல எலும்புகள் கொண்ட மூட்டை, கூட்டு மூட்டு என்றும்; இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட மூட்டுகள் இணைந்து மட்டுமே இயங்கும் மூட்டை, இணைப்பு மூட்டு என்றும் அழைக்கின்றார்கள்.

மூன்று வகையான மூட்டுக்கள்

1. o. angung, espli) (Immovable Joint) @556; எடுத்துக்காட்டு: மண்டை ஒடு. -