பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 57

கையை முன்புறமாக நீட்டும்போது முத்தலைத் தசையும் (Triceps) கையை மடக்கும் பொது இருதலைத்தசையும் (Biceps) பிராக் கியே லிஸ் (Brachiails) என்ற தசையும் உதவுகின்றன.

இதன் இயக்கங்கள்:

I. Gog, Gou 5l sio (Extension)

2. கையை மடக்குதல் (Flexion) . முழங்கால்மூட்டு (Knee Joint)

தொடை எலும்பான பிமரின் (Femur) கீழ்ப்பகுதியும், முன்கால் எலும்புகளான டிபியா (Tibia), பெட்டெல்லா Petella) வின் மேற்பகுதிகளும் சேர்ந்து கொண்டு, முழங்கால் முட்டை உண்டு பண்ணுகின்றன. -

இந்த மூட்டில் குருசியேட் தசைநார்களும் (Gruciate Ligament) மற்றும் மெனிஸ்கஸ் குருத்தெலும்புகளும் (Meniscus) சேர்ந்து உறுதியாகப் பொருத்திக் கட்டியுள்ளன. இதன் இயல்பான தேய்வற்ற இயக்கத்திற்கு சைனோவியல் எண்ணையும் உதவுகிறது.

இதன் இயக்கமும் காலை முன்புறமாக நீட்டல், காலை உட்புறமாக மடக்குதல் என்பதாக அமைகிறது.

3. Gug espc.(3 (Gliding Joint)

எலும் பின் தட்டையான பகுதிகளால் இந்த வகை முட்டுக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. -

இத்தகைய மூட்டு மணிக்கட்டுப் பகுதியில் (Wrist Joint) அமைந்திருக்கிறது.

மணிக்கட்டில் உள்ள எல்லா மூட்டுக்களும் எல்லா பக்கங்களிலும், எல்லா திசைகளிலும் இயங்க இயலும்.