பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο - - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

குவிகிற இயக்கம் என்பது நீட்டியிருக்கிற கையில் உள்ள எடையை, மார்புப் பக்கமாகக் கொண்டு வருவதற்காக மடித்துக் கொண்டு வருதல்.

இந்த நீள்கிற இயக்கத்தையும், குவிகிற இயக்கத்தையும் நீண்டு குவிகிற தசை இயக்கம் (isotonic) என்றும் கூறுவார்கள். - -

உடலில் உள்ள முக்கியமான தசைகளை, படம் பார்த்துத் தெரிந்து கொள்க. - - -

தசைகளும் விசைகளும்

விசை மிகுந்த தசைகள் தான் வனப்பும் வலிமையும் உடையனவாக விளங்குகின்றன. -

விசையற்றுத் தளர்ந்து போகின்ற தசைகள், தேகத்தின் தோய்வுக்கும், தேய்ந்து போகிற அழகிற்கும், தடுமாற்றம் நிறைந்த செயல்களுக்கும் தாயகமாகிப் போகின்றன.

தசைகள் சுருங்கும் போது தான் அவை வேலை செய்கின்றன. ஒரு தசையின் அளவு அதிகரிக்கிறபோது, அது தூக்கக் கூடிய எடையின் அளவும் அதிகரிக்கிறது. - .

ஒரு எடை தூக்கப்படுகிற உயரமானது, ஒரு தசையின் நீளத்தைப் பொறுத்தே அதிகமாகிறது. -

ஆகவே, ஒரு தசையின் பருமனும் நீளமும் அதிகமாக இருந்தால், அது செய்கிற வேலையும் அதிகமாக இருக்கும் என்பதே தசையின் அடிப்பட்ை அசைவாக உள்ளது என்பதை நாம் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறோம். -

இனி வேலையின் போது, தசைகள் பெறுகிற சில மாற்றங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.