பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆற்றுகிறது. ஆல்புமின் கல்லீரலிலிருந்து உற்பத்தியாகிறது. எதையும் ஏற்றுக்கொண்ட, ஆற்றுப்படுத்தி எதிர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்கின்ற சக்தியை (Immunity) குலோபுமின் கொடுக்கிறது. பைபிரினோஜென் சக்தி, இரத்தம் உறைவதற்கு உதவுகிறது.

இரத்த அணுக்கள் (Blood Cells) - 1. சிவப்பு அணுக்கள் (Red cells)

வடிவம்: இரத்த சிவப்பு அணுக்கள், அதனுடைய நிறத்தை ஹீமோகுளோபின் என்ற சிறப்புப் பகுதியிலிருந்து பெற்றுக் கொள்கின்றன. ஹீமோ குளோபின் என்பது புரோட்டின் மற்றும் இரும்புச் சத்துக்களினால் உருவாக்கப் படுவதாகும்.

ஒவ்வொரு சிவப்பு அணுவும் மிகச் சிறிய வடிவம் உடையதாக விளங்குகிறது. அதன் வடிவமைப்பு 0.008 செ.மீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளது. அதாவது அதன் அளவானது ஒர் அங்குலத்தில் 3000த்தில் ஒரு பங்காக இருப்பது போன்ற அமைப்புக் கொண்டதாக உருப்பெற்றிருக்கிறது. -

ஒரு சிவப்பணுவானது வட்டவடிவமான மெத்தை அமைப்புடன், இருபுறமும் குழிந்தும் ஒரம் தடித்தும் அமைந்திருக்கும். இவ்வணுக்களுக்கு உயிரணு (Nucleus) கிடையாது. இவ்வனுக்களைச் சுற்றி, ஸ்ட்ரோமா (Stormn) என்ற மேலுறைப் பகுதியும் உண்டு.

இவ்வுறையுள்தான், ஹீமோகுளோபின் என்ற இரும்புச் சத்து நிறைந்த பொருள் நிறைவாகப் பாதுகாக்கப்படுகிறது.

ஹீமோகுளோபினின் பணியானது, நுரையீரலிலிருந்து உயிர்க்காற்றைப் பெற்று, உடலில் உள்ள எல்லா