பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 83

சரியான சமநிலை உணவு இல்லாதபோதும், பட்டினியால் பரிதவிக்கிறபோதும், இரத்த சோகை நோய் ஏற்பட்டு விடுகிறது.

2. Glavchavoorwgoyoch (white cell or Lcukocytes) அளவும் வடிவும்

வெள்ளையணுக்கள் சிகப்பணுக்களைவிட அளவில் பெரியதாகவும், உயிரணு உடையதாகவும் இருக்கும். வட்ட வடிவமான அமைப்பு உடையதாக இருந்தாலும், இவைகளுக் கென்று குறிப்பிட்ட வடிவம் கிடையாது. இடத்திற்கு ஏற்றவாறு, உருவத்தையும் வடிவத்தையும் மாற்றிக் கொள்ளும் இயல்பினதாக இவை இருக்கின்றன.

ஒரு துளி இரத்தத்தில், சிவப்பணுக்கள் 250,000,000 இருக்கிறதென்றால், வெள்ளை அணுக்கள் 400,000 தான் இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் அறிந்து கூறுகின்றனர். பிறப்பிடம்

வெள்ளை அணுக்களை முக்கியமான இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

1. கிரேனுலோசைட்ஸ் (Granulocytes) இந்த வகையான வெள்ளையணுக்கள் எலும் புச் சோற்றிலிருந்து தோன்று கின்றன.

2. லிம்போசைட்ஸ் எனும் பெயர் பெற்ற வெள்ளை அணுக்களில் ஒரு வகை, நிணநீர் மண்டலத்திலிருந்தும் (Lymphatic system), மண்ணிரலிலிருந்தும் பிறக்கின்றன. வெள்ளையணுக்களின் வேலைகள்

வெளியிலிருந்து தேகத்திற்குள்நுழைந்து துன்பங்களைத் தோற்றுவிக்கின்ற நோய்க்கிருமிகளை எதிர்த்து அழிப்பதே, வெள்ளையணுக்களின் வேலையாகும்.