பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தேசீய இலக்கியம் தலை குனிவர். அதுபோல மரங்கள் தூங்கின என்ற பொருளில் தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரந் துஞ்ச' என்று கலித்தொகை பேசுகிறது. இம் மூன்று உவமைகளும் ஒரு பொருள் கருதியே வந்துள்ளன. பழங்கால நூலாகிய கலித்தொகை மரம் தூங்குவதற்குத் தம் புகழ் பேசக் கேட்ட பெரியவர்களையும், சிந்தாமணி நெற்பயிர் முற்றி விளைந்து வளைந்திருத்தற்குக் கல்விசேர் மாந்தரையும் கூறின. ஆனால், சேக்கிழார் அதே பொருளுக்கு உவமைகூற வந்தார். அடியார்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தபொழுது தலை வணங்கிக்கொள்ளுதலை உவமை கூறுகிறார். அவர் நூல் முழுதும் பக்திச் சுவை மிகுதிப்பட்டிருத்தலுக்கு இது சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும். பக்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடும் இக் காப்பியத்திற்கு ஏற்ற மனநிலை சேக்கிழாரிடம் இருந்தது. ஆனால், இவ்வொரு தகுதி மட்டும் இருந்துவிட்டால் சிறந்த காப்பியம் தோன்றிவிடாது. பல்சுவைகளும் நிறைந்த ஒரு நூலைப் பாட ஒரு சுவையைப்பற்றி மட்டிலும் நிறைந்த அறிவுடைய ஒருவர் தகுதியுடையார் என்று கூறிவிடல் இயலாது. அவ்வாறாயின் சேக்கிழாரிடம் ஏனைய தகுதிகள் இருந்தனவா? நிறைய இருந்தன என்றே கூறல்வேண்டும். உதாரணமாக ஒன்று காண்போம். ஒரு நாட்டில் ஒரு தலைவர் தோன்றினார் என்று கூறும்போது, அதற்கு ஏற்ற சூழ்நிலை அங்கு இருந்தது என்று கூறவேண்டுவது ஆசிரியர் கடமையாகும். சூழ்நிலை பற்றி பாடும்பொழுது இத்தகைய இடத்தில் இத்தகையவர் தோன்றுதல் இயல்புதான் என்ற எண்ணம் நம் மனத்தில் தோன்றவேண்டும். உதாரணமாக, வாணி க மனப் பான்மையை எடுத்துக்கொள்வோம் செய்க பொருளை: என்ற கொள்கையுடையார் இவர்கள். அப் பொருளைச் சம்பாதிக்கும் வழியில் ஒரோ வழி நடுவு நிலைமை நீங்க வேண்டினும் அஞ்சாது நீங்கவேண்டும். இல்லையெனின்