பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 101 நாயைப் பாருங்கள்! குலைக்கிறது. அக் குரைப்புச் சத்தத் தையும் அவர்கள் மணி ஓசை அடக்கிவிடுகிறது வேறு என்ன செய்ய முடியும், எளியாரை வலியார் வாட்டும்போது? அடுத்தாற்போல் உள்ள மருதமரந்தான் பவளத் தூணாக இருக்கிறது. அதில் கிழிந்த தோல்தான் மரகதத் தொட்டில். நிழலில் உறங்குகிறது சேரிக் குழந்தை ஒன்று. பறை முதலிய இசைக் கருவிகள் தொங்குகின்றன எங்கும்! தற்காலத்தில் சேரிக்குச் செல்லும் சமுதாய சேவைத் தொண்டர் கண்டதுண்டா இக் காட்சியினை? அவர்தாம் சேரிக்குப் போவது பெரிய தியாகம் என்று நினைத்துக் கொண்டு போகிறாரே. அவர் எங்கே காணப்போகிறார் இக் காட்சிகளை? ஆனால் சோழப் பேரரசின் முதல் அமைச்சர் இவற்றைக் கண்டு இதோ பாடுகிறார் : 'கூர்உகிர்மெல் அடி அளகின் குறும்பாாப்புக் குழுச்சுழலும் வார்பயின்முன் றிலில்கின்ற வள்ளுகிர்காய்த் துள்ளுபறழ் கார் இரும்பின் சரிசெறிகைக் கருஞ்சிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்புமணி.” 'வன்சிறுதோல் மிசைஉழத்தி - மகவுஉறக்கும் நிழல்மருதும் தன்சினைமென் பெடையொடுங்கும் தடங்குழிசிப் புதைழேல்." (பெ. பு -திருநாளைப் போவார்; 7, 8) (கோழி தன் குஞ்சுகளுடன் உலாவுகிறது. தாயின் குட்டியைச் சிறார் கவர்ந்து ஒடுகின்றனர்.) எனவே, இயற்கை வருணனை, கற்பனை வருணனை என்ற இரண்டு வகையிலும் தலையாய கவிதை இயற்றும்