பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 171 கொடுத்தாலும் உணவுப் பொருளை வாங்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும். அப்பொழுதுதான் வீட்டில் பயனற்ற பொருள் அல்லது பொன் கிடந்து உறங்கவும் அதனால் பெறக்கூடிய உணவுப் பொருள்கள் இல்லையாகவும் இருக்கிற நிலைமை ஏற்படும். நம்பியாரூரருக்கு இறைவன் நெல் கொடுத்த நிலையில் திருவாரூர் ஏறத்தாழ இந்த நிலையில் தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவரவர்கள் வீட்டு எல்லையில் இருக்கும் நெற்குவியலை அவரவர் அள்ளிக் கொள்ளலாம் என்று பரவையர் முரசு அறைவிக்கிறார். 'வன்தொண்டர் தமக்களித்த கெல்கண்டு மகிழ்சிறப்பார் 'இன்றுங்கள் மனைால்லைக்கு உட்படுகெல் குன்றுஎல்லாம் ப்ொன்தங்கு மாளிகையில் புகழ்பெய்து கொள்க' என வென்றிமுரசு அறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்” - (பெ.பு.-ஏயர்கோன்; 88). அவர்களுடைய வீடுகளைப் பொன்தங்கு மாளிகை’ என்று பரவையார் குறிப்பிடுகிறார். திருவாரூரில் ஏழைகள் என்று கூறத்தக்கவர் யாரும் இல்லை போலும். அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று வாழ்பவர்களே. பணம் அல்லது பொன்னுக்கு ஒவ்வொரு நாட்டிலும் பஞ்சமே இல்லை. தற்பொழுது ஏற்பட்ட உணவுப் பஞ்சமே அங்கு உண்டுபோலும். ஆகவேதான், பொன் தங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்மின்கள்' என்று அம்மையார் அறிவிக் கின்றார். இவ்வாறு ஊரார் அனைவரும் தம்தம் வீடுகளின் முன்னர் இருந்த நெல்லை எல்லாம் எடுத்துக்கொண்ட பிறகு, பரவையார் தம்முடைய கணவரைச் சென்று வணங்கினாராம். வாய்விட்டு அவர் ஒன்றும் கூறவில்லையாயினும், பரவையா ரின் வணக்கம் மிகுந்த குறிப்பை உடையதாய் இருந்தது. ஒரு கணவனும் மனைவியும் இல்லறம் நடத்துவதற்கு மிக இன்றியமையாக பயனாக வள்ளுவர் குறிப்பிடுவது