பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தேசீய இலக்கியம் அனைத்தும் அவனுடைய கருணையாலேயே தருகிறான் என்பதும் நினைவிற்கு வந்தன. தாம் அவசரத்தில் செய்து விட்ட பிழையை உடனே உணர்ந்துவிட்டார். உடனே இறைவனிடம் பிழைக்கு மன்னிப்பு வேண்ட முடிவு செய்து விட்டார். ஆனால், இதுவரையில் நண்பன்போல் பழகி விட்டமையின் முழுவதும் மன்னிப்பு வேண்டுவதும் சற்றுப் பொருத்தம் இல்லாத செயல்போ ஆகிவிட்டது. கணவன் மனைவிப் போராட்டத்திலும் நண்பர்களுடைய போராட்டத் திலும் இத்தகைய ஒரு நிலை வருதல் அனுபவம். மன்னிப்பு வேண்ட விரும்பினாலும் கேட்பது புதுமையாகவே இருக்கும். எனவே, வேடிக்கை பேசவது போலவும், மன்னிப்புக் கேட்பது போலவும் அமைந்த முறையில் இப்பேச்சு நிகழும். 'ஏதோ நான்தான் தவறுதலாகப் பேசிவிட்டாலும் அதை இவ்வளவு தூரம் மனத்தில் வைத்துக் கொள்ளலாமா? விட்டு விடுங்கள் என்று மன்னிப்பு வேண்டும் முறை நாம் அறிந்ததுதானே. அதோ ஆரூரர் பன்னிரண்டாம் பாட்டில் இம் முறையில் இறைவனிடும் வேண்டுகிறார். ஏசின் அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெரு மான்என்று எப்போதும் பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்து அடிகளை அடிதொழப் பன்னாள் வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் வளவயல் காவல்ஆ ரூரன் பேசின பேச்சைப் பொறுத்திலர் ஆகில் இவர்அலாது இல்லையோ பிரானார்? (சுந்தரர் தேவாரம் 145) இப் பாடலிலும் தமக்கே உரிய நயம் தோன்றப் பாடுகிறார். திருக்குறளில் 'பழைமை என்று ஒர் அதிகாமே (81) வகுக்கிறார் வள்ளுவர். நட்புச் செய்துவிட்ட பிறகு நண்பர் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அவருடன் பல நாள்களாக இருக்கும் நட்புக் கருதி அப் பிழையை உடனே