பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 198' அவன் அன்பைத் தந்தான் எனினும், அந்த அன்ப்ை நான் பயன்படுத்தவில்லை என்ற பொருளில் நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம்' என்கிறார் மாணிக்கவாசகர். அவனிடத்திலே கொஞ்சங்கூட எனக்கு அன்பு இல்லை என்பதை அவன் அறிபவன் அவ்வாறு இருந்தும், அவன் என்னை ஆட்கொண்டான் என்று சொல்லும் பொழுது, ஒரு பெரிய உண்மையை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அவன் நமக்குக் கொடுத்த இந்த அன்பாகிய விதை இருக்கிறதே அதைத் தக்க முறையில். நாம் பயன்படுத்தாமற்போனாற்கூட அவன் அப்பொழுதும் நமக்குப் போருள் செய்கின்றான் என்பதைத் தெரிந்து கொண்டால், ஒரு பெரிய நன்மை அடையலாம். அஃது என்ன நன்மை? நம்ம்ையும் மீறிய துயரம் வரும்பொழுது, நாம் செய்த தவறுகளையெல்லாம் சிந்தித்துப் பார்த்து. இனி உய்கதியே கிடையாதா? என்று வருந்துகிறேரமே. அப்படி வருந்துபவர் கட்கும் கவலை வேண்டா, அவன் அருள் எப்படியும் கிட்டும் என்ற ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. வைணவர்கள் 'உடைமைக்கு ஒரு முழுக்கு. உடையானுக்குப் பத்து முழுக்கு என்று சொல்வார்கள். மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டு ஒருவன் கிணற்றில் தண்ணீர் இறைத்தான், மோத்ரம் தவறிப் போய்க் கிணற்றுள் விழுந்துவிட்டது. மோதிரம் தண்ணிருக்குள் போகும்பொழுது ஒர்ச்சந்திலே போய் விழுந்துவிட்டது. மோதிரக்காரனுக்கல்லவா அதை மீட்கும் கவலை. எனவே, பல முறை மூழ்கி மூழ்கிப் பார்க்கிறான். எட்டுத் தடவை மூழ்கினான். எனினும் மோதிரம் கிடைக்கவில்லை. அதோடு விட்டுவிடுகிறானா? இல்லை. மறுபடியும் மூழ்கிப் பார்க்கிறான் மண்ணையெல்லாம் வெளியில் கொண்டுவந்து கொட்டுகிறான். மோதிரம் கிடைக் கிறவரையில் அவன் விடவே இல்லை. நாமெல்லாம் மோதிரம் போன்ற உடைமைகல் அடிமைகள். நம்மைப் படைத்த, இறைவன் இருக்கின்றானே அவன் உடைமைக்காரன். நாம தச்-48 ..