பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 蛇重盘 வைப்பதற்காகத்தான். செம்பு இருக்கிறது. அதில் ஒரளவு பொன் கலந்தால் அதற்கு என்ன கிடைக்கிறது, தெரியுமா? அக்கினி திராவகத்தில் போட்டு விடுவார்கள்; ஏன் அந்தச் செம்பிலிருந்து பொன்னைப் பிரிப்பதற்காகத்தான். வெறுஞ் செம்பாக மட்டுமே இருந்துவிட்டால் யார் கவலைப்படப் போகிறார்கள்? அதுபோல், உய்கதி அடையக்கூடிய தகுதி ஒரு சிறிதாவது, திருந்தும் இயல்பு சிறிதாவது நம்மிடத்திலே இருக்குமேயானால், அறத்தினாலேயோ மறத்தினாலேயோ, துன்பத்தைத் தந்தோ ஆண்டவன் நம்மை ஆட்கொள்ளத் தவிக்கின்றான், திருத்துவதற்கு வழியே இல்லை என்றால், அதைப்பற்றி அவன் கவலைப்படுவதேயில்லை. இன்னும் எத்தனையோ பிறவிகள் இருக்கின்றன. உனக்கு ஆதலின் சாவதானமாக வந்து சேர்க என்று போய்விடுகின்றான். இத்தகையவர்கட்கு வாழ்க்கையிலே எவ்விதமான வளக் குறைவும் இல்லை; தலமாக இருக்கின்றார்கள். துன்பம் அவர்களை அண்டுவதுமில்லை. . . - ஆனால் துன்பத்தின்மேல் துன்பம் யாருக்கு வருகிறது? அவனை நம்புகிறவனுக்குத்தான் மேலும் மேலும் வருகிறது. ஏன்? அந்தத் திராவகத்தில் போடுகின்ற சோதனையிலே முன்னேறி வரவாத்தான், துன்பம் உழக்க உழக்கத்தான் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்போல் புனிதத்தன்மை அடைகிறான். ஆகவே, ஆண்டவன் கருணை துன்பத்தைக் கூடத்தருமா? உறுதியாகத் தரும். யார் இல்லை என்று சொல்ல முடியும்? குழந்தையைக் காலிலே போட்டு, இரண்டு கையையும் பிடித்துக்கொள்ளச் சொல்லித் தாய் மருந்து ஊற்றுகிறாளே! அந்தக் குழந்தை ஐயோ என் தாய்க்கு அன்பில்லை என்று சொன்னால், அது பொருந்துமா? வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன்போல்’ துன்பந் தந்தாலும் இறைவனிடம் பக்தி குறையாது என்று என்றைக்கோ அந்த அனுபவத்தை ஆழ்வார் பேசுகின்றார். மருத்துவன் செய்ததெல்லாம் என்ன? கத்தியினாலே அறுத்தான்; நெருப்பினாலே