பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 89 காப்பியங்களில் அவர்களை அறிந்துகொள்ளாமல் நுழைவதால் பாதிப்பயனையே அடையமுடியும். அமைச்சர் பதவியிலிருந்து அதனை நீத்துத் துறவு பூண்டவர் சேக்கிழார். அரசனையும் அவனது செல்வத் தையும் நன்கு மதித்தவர். புகழ் என்னும் ஏணியின் உச்சிப்படிக்கு மிக இளமையிலேயே சென்றவர். அத்த கையவர் மனம் மாறித் துறவு மேற்கொண்டார் என்பது அவர் வாழ்க்கையில் அறியவேண்டிய ஒரு பகுதியாகும். இளமைக் காலத்தில் ஒருவன் விரும்புகின்ற அத்தனை பேறுகளும் நிறைந்திருந்தும் சேக்கிழார் அவற்றை உதறித் தள்ளி உள்ளத் துறவு பூண்டார் என்றால், தக்க காரண்ம் ஒன்று இருக்கத் தானே வேண்டும்? உலகில் உள்ள இன்பம் நிலையாதது என்ற உண்மை தெரிந்தபின் தோன்றிய மன உறுதி அல்லது வைராக்கியமே அவரைத் துறவுபூணச் செய்தது. மனத்தில் உள்ள பற்று முதலியவற்றை நீக்கி விட்டால் அம் மனத்தில் வேறு பொருள்கள் நிரம்பவேண்டும். மனம் ஏதாவது ஒரு பொருளைப் பற்றிக்கொண்டுதான் நிற்கும். ஆகவே, சேக்கிழார் தம் தூய மனத்தில் இறைவனிடம் அன்பு அல்லது பக்தியை நிரப்பிவிட்டார். அந்தப் பக்தியானது அவரது காப்பியம் முழுவதும் நிறைந்து நிற்கிறது. அவர் கூறிய அடியார்களின் புற வாழ்க்கையை வரலாற்றுமூலம் நாம் அறிதல்கூடும். எனினும், அவர்களுடைய மனநிலையை, அகமனத்தை அல்லது பண்பை அறிய முடியாது. அவற்றை அறியவேண்டுமாயின் சேக்கிழார் ஒருவரே அறியமுடியும். அவர் தாம் அறிந்ததைக் காட்டினால் ஒழிய நாம் அதனைக் காணுவது இயலாது. அடியார்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டால் ஒழிய பல சமயங்களில் அவர்கள் செய்யும் செயல் களுக்குப் பொருள் விளங்காமல் நாம் அல்லற்பட நேரிடும். செல்வத்தையும் குழந்தையையும் தாம் கொண்ட கொள் கைக்காக விருப்பத்துடன் தியாகம் செய்யும் மனப்பான்மை ஒன்று. ஆனால், அந்தத் தியாகத்தின் சிறப்பை அறியும்