பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தேசிய இலக்கியம் அதுபோலத் தமிழகம் இந்த நூற்றாண்டுகளில் தலைநிமிர்ந்து நின்றது. திரைகடல் கடந்தும் தமிழன் வெற்றி பெற்றானா தலின் அவன் நாட்டில் பொருட்செல்வம் கொழித்தது. வாணிகம் நிமிர்ந்து நின்றது. ஆனால், இராசராசனும் இராசேந்திரனும் இவ்வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர்கள். எனவே, அவர்கள் காலத்தில் பொருள், வீரம் என்பவற்ேேறாடு அருட்செல்வமும் மிக்கிருந்தது. முயற்சியால் பொருள் தேடுகிற வரையில் மனத்துக்கு வேலையிருக்குமாகலின் அம்மனம் கெடுவதில்லை. ஆனால், பின் சந்ததியில் வருகிறவர்கள் இந்த முயற்சி இல்லாமலும் இப்பொருளை அநுபவிக்கத் தொடங்குகிறார்கள். நிறைந்த பொருளும் கையில் இருந்து, நல்ல வழியில் பணத்தைச் செலுத்துவதற்கு முயற்சி ஒன்றுமில்லையாயின், அம்மனம் தீய வழியில் செல்லாமல் என்ன செய்யும்? பெரும் பொருள் தேடித் தம் பிள்ளைகட்குச் சேர்த்து வைத்துவிட்டுச் செல் சிறவர்கள் வாழ்க்கையையும், அதனைக் கண் மூடித்தனமாகத் தீய வழியில் செலவு செய்கிற பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதேபோல இத்தமிழ்நாட் டிலும் ஒரு காலம் வந்தது. நமது சேக்கிழார் காலத்தில் தமிழ் மக்கள் பழைய முயற்சியும் வெற்றியும் இல்லாதவர்களாக ஆகிவிட்டனர். ஆனால், கோதாவரி முதல் கன்னியாகுமரி வரை தமிழர் ஆட்சியில் நாடு அமைதியாக இருந்து வந்தது. எனவே, செல்வத்துக்குப் பஞ்சமில்லை. இச்செல்வத்தால் களியாட்டம் தமிழ்நாட்டில் மிகுந்து விட்டது. வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்பதையே மறந்துவிட்டுத் தமிழர்கள் இன்பவேட்டையில் புகுந்துவிட்டனர். இத்தகைய காலத்தில் தமிழ்மக்கள் எவ்வாறு இருந் திருப்பார்கள் என்று கூறவும் வேண்டுமா? சங்க காலத்தில் கூட இவ்வளவு நீண்ட நாட்கள் ஒரே பேரரசின்கீழ்த் தமிழ் நாடு இருந்ததில்லை. செல்வத்திலும், செல்வக் களிப்பிலும் நாடு எல்லையற்ற வளம் பெற்றிருந்தது. மக்கள் எப்படி இருந்தார்கள் என்று கூற அதிக தூரஞ் சென்று ஆராய