பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

合2 தேசீய இலக்கியம் தன் வாழ்நாள் முடிவதற்குள் எந்த வழியைக் கடைப் பிடித்தாவது பத்து லக்ஷம் ரூபாய் சேகரித்து விடவேண்டும் என்றும் நினைக்கலாம். இதுவும் ஒரு குறிக்கோள்தான்; எனினும் மிக மட்டமான குறிக்கோளாகும் ஆனால், மற்றொரு மனிதன் பாழ்பட்டு நின்றதாம், ஒர் பாரத தேசந் தன்னை வாழ்விக்கவேண்டும் என்று நினைக்கலாம். இதுவும் ஒரு குறிக்கோள்தான். எனினும் மிக உயர்ந்த குறிககோள் என்று கூறப்படும். உயர்ந்ததோ மட்டமானதோ ஒரு குறிக்கோள் இல்லாவிட்டால் வாழ்க்கை சுவைப்படாது. வாழ்க்கையில் வெறுப்பும் தட்டி விடும். பல சமயங்களில் வாழ்க்கை கசந்துவிட்டது என்று ஒரு துண்டுக் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு ஒரு முழம் கயிற்றையோ, ஒடும் ரயிலையோ தேடிய பெரியவர்களை நாம் கேட்டதில்லையா? ஏன் இவர்கட்கு இவ்வளவு கசப்பு ஏற்பட்டது? வாழ்க்கையில் எவ்விதமான குறிக்கோளும் இல்லாததால் உண்டதே உண்டு, உடுத்ததே உடுத்து, கேட்டதையே கேட்டுக் கடைசியில் வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டுவிட்டது; அது முற்றி உயிரை விடும் நிலைக்கும் செலுத்திவிட்டது மட்டமான குறிக்கோள் உடையவர்கள் வாழ்க்கையும் இவ்வாறுதான். பெரும்பாலும் முடியும். சில லக்ஷம் பொருளைச் சேகரிப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று நினைத்து, மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் சேகரித்து, அம்முயற்சியில் கிழட்டுத் தனத்தையும் அடைந்துவிடுகிறார்கள் அக்குறிக் கோள் கைகூடியவுடன் வாழ்க்கை ஒரு பெரிய சூனியமாகக் காண்கிறது; வெறுப்படைந்து உயிரை விடும் நிலையும் ஏற்படுகிறது. . தனிப்பட்ட மனிதர்கள் இவ்வாறு குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்தால் ஒழிந்துபோகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால், ஒரு சமுதாயமே இவ்வாறு மாறிவிட்டால் என்ன ஆகும்? விரைவில் அச்சமுதாயம் அழிவது தவிர வேறு யாது? பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாடு ஏறத்தாழ இந்நிலையில்தான் இருந்தது. பொருட்