பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 6 I காரத்தாலும் தருக்கத்தாலும் முடிவு செயயக்கூடாது. வழியிற் சென்று பார்த்து நினைத்த பயன் கிட்டியதா என்று காணுதலே சிறந்த முறை. மனிதன் தோன்றிய நாள்தொட்டு அமைதி என்ற ஒன்றை நாடித்தான் அலைகிறான். இதில் கருத்துவேற்றுமை இல்லை. சிலர் இந்த உலகத்தில் அமைதி வேண்டும் என்று தேடினர். அடுத்த உலகம் ஒன்று இருப்பதாக நினைத்து அதில் அமைதி வேண்டும் என்று நாடினர் சிலர். இன்னும் சிலர் இவை இரண்டிலும் அமைதியை நாடினர். உலகம் முழுதையும் ஆராய்ந்தாலும் யாவரும் இம் மூன்று பகுப்பினுன் அடங்கிவிடுவர். இப் பகுப்பினருள் முதலாவது உள்ளவர்களின் இவ்வுலகம் ஆவதற்கு ஒரே ஒரு வழிதான் .ேண்டு. வேற்றுமை என்பது இல்லாது ஒழிதலே அவ் வழி ஆம். மனிதனுக்கு மனிதன் வேறுபட்டுக் காணப்படும் கிேயல் .ேiறுமை அனைத்தையும் அழித்துவிட்டால், லகல் வாழத் தகுந்த இடமாகும் என்பதே அவர்கள் . ஆனால், உலகியல் வேற்றுமை அழிந்த ம் மன இயல் வேற்றுமை இருந்தே தீரும் என்பதை வர்கள் நினைப்பதில்லை: இறுதியாக, இவ்வுலகில் இரண்டு மனிதர்கள் இருக்கின்றவரை இரண்டு மனங்கள் இருந்துதான் தீரும். அவற்றிடையே வே ற் று ைம யு ம் இருந்துதான் தீரும். அதனை அழித்துவிட முடியாது. ஆனால், இந்தக் கட்சியர்கள், மனித மனம் சட்டதிட்டங் களுக்கு உட்படுத்தப்பெறக்கூடியது என்று நம்புகிறவர்கள். மக்கள் மனதைக்கூட அரசியலார் கட்டுப்பாடு செய்து பழககி விடலாம் என்று கருதுகிறவர்கள். உலகியற் பொருள்கள் அனைவருககும் கிடைத்த மாத்திரத்திலேயே மனம் அமைதி யாகிவிடும் என்று நினைக்கும் இவர்கள், மனத்தின் கூறுபாட்டை அறியாதவர்கள் என்று இன்றைய விஞ்ஞான சாத்திரங்களும் மனத் தத்துவ நூல்களும் அறிவிக்கின்றன. ஆனால், பழங்காலத்திற்கூடத் தமிழன் இவ்வுண்மையை உணர்ந்து, அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அறப்