பக்கம்:தேன்பாகு.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11

யாகக் கிராமம் சென்று, அங்கே சொந்தக்காரரை ஏமாற்றிவாழும் காரியஸ்தர்களின் அட்டுழியங் களைக் கண்டு பிடிப்பது என்ற உறுதியை மேற். கொண்டான். தாய்நாடு வந்தான், ஒருநாள் கிராமத்துக்குப் போனான்.

'இன்று நாம் நம் நிலங்களைப் பார்க்க வேண்டும்" என்று சின்னதுரையிடமிருந்து உத்தரவு பிறந்ததைக் கண்டு காரியஸ்தர் ஆச்சரி யப்பட்டுப் போனார். -

அப்படியல்லவா இருக்க வேண்டும்?" என்று: பாராட்டினார்.

சீமை சென்றுவந்த குமரன் நிலங்களைப் பார்வையிடச் சென்றான். கடலை விளைந்திருந்த தோட்டத்துக்குப் போனான். இதோ இது கடலைத் தோட்டம். காய் விளைந்து முற்றி விட்டது. மகசூல் எடுக்க வேண்டியது தான்;" என்றார் காரியஸ்தர், -

குமரன் வரப்பருகில் உட்கார்ந்து கொண் டான். ஒரு கடலைச் செடியைத் தொட்டுப் பார்த் தான்; புரட்டினான். எதையோ தேடுவதைப் போல இருந்தது. இந்த ஆசாமிகள் பட்டப் பகலில் கொள்ளையடிப்பவர்கள் எ ன் ப து உண்மை. காம் ஒன்றையும் கவனிக்க மாட்டோம் என்ற நினைவினால் பொய் சொல்லி ஏமாற்று கிறான், இந்த மனுஷன், காய் விளைந்து விட்ட தாம் செடி முழுவதும் ஒரே இலையாக இருக் கிறது. ஒருகாயைக் கூடக் காணோம். நமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/13&oldid=581210" இருந்து மீள்விக்கப்பட்டது