பக்கம்:தேன்பாகு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

ஒரு மாதம் ஆயிற்று; இரண்டு மாதங்களும் ஆயின, உத்தியோகத்துக்கு உத்தரவு வரவில்லை, மறுபடியும் தாசில்தாரிடம் கெஞ்சினான். "வேறு மணியக்காரரிடம் சொல்லுங்கள்" என்றான்,

அவர் உடனே ஒரு காகிதத்தை எடுத்து எழுதத் தொடங்கினார். அப்போது குப்பன் உள்ளே ஓடிப்போய் ஒரு பெரிய இட்டிலியை எடுத்துக் கொண்டு வந்து, "இதன் மேல் எழுதித் தாருங்கள்" என்றான்.

தாசில் தாருக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏனப்பா இதன் மேல் எழுதச் சொல்கிறாய்?" என்று கேட்டார்.

போன தடவை அந்த மணியக்காரர் நீங்கள் கொடுத்த காகிதத்தைத் தின்னச் சொன்னார். நான் கஷ்டப்பட்டு மென்று விழுங்கினேன். இப்பொழுதும் அப்படிச் செய்யச் சொன்னால் சங்கடமாக இருக்கும், இந்த இட்டிலியின் மேல் எழுதித் தந்தால் இதைச் சுலபமாகத் தின்று விடலாம்" என்றான்.

தாசில் தாருக்குச் சிரிப்பாக வந்தது. 'இந்த முட்டாளை அவர் ஏமாற்றி விட்டார்' என்று உணர்ந்து கொண்டார்.

"போடா, இட்டிலிக் குப்பா! உனக்கு அந்த வேலையெல்லாம் வேண்டாம், உன்னால் அந்தக் காகிதங்களையெல்லாம் தின்ன முடியாது, பேசாமல் இங்கே சமையற்காரனாகவே இருந்து விடு உனக்குச் சம்பளம் கூடப் போட்டுத் தருகிறேன்” என்றார்.

அதுமுதல் அவனுக்கு இட்டிலிக்குப்பன் என்ற பெயர் கிலைத்து விட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/17&oldid=1267548" இலிருந்து மீள்விக்கப்பட்டது