இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கங்கைக் கரையில் ஒருபிராமணர் கங்கையின் மகாத்மியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். "கங்கையில் நீராடினால் எல்லாவிதமான பாவங் களும் போய்விடும். கைலாசம் போவது ஏன்?" என்று சொன்னார்.
கைலாசத்திலிருந்த பரமசிவனைப் பார்த்துப் பார்வதி, கங்கையில் முழுகினவர் எல்லோரும் பாவங்கள் நீங்கிக் கைலாசத்துக்கு வந்துவிட்டால் இங்கே இடம் கொள்ளாதே' என்றார்.
பரமசிவன், 'போடி, பைத்தியக்காரி கங்கை. யில் குளிப்பவர்கள் எல்லோரும் நம்பிக்கையுடன்