பக்கம்:தேன்பாகு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


39

தது. "அண்ணே, நீ எப்படி இருக்கிறாய்?" என்று ஆடு மாட்டை விசாரித்தது. -

"அப்பப்பா! உன் வாலை கான் வுைத்துக் கொண்டது தப்பாகப் போயிற்று. முதுகில் ஈ அமர்ந்தால் ஒட்ட முடியவில்லை. இதை வைத்துக்கொண்டு நீ எப்படித்தான் காலம் கடத் தினாயோ தெரியவில்லை' என்று வருத்தத் தோடு மாடு சொல்லியது.

"ஆமாம் அண்ணே உன் வாலை வைத்துக் கொண்டு நான் படுகிற பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. வேலியைத் தாண்ட முடியவில்லை. வால் எதிலாவது சிக்கிக்கொண்டால் படாத பாடு படு கிறேன். அவரவர்களுக்கு ஆண்டவன் எதெது கொடுத்திருக்கிறானோ, அதுதான் சரி' என்றது

"ஆமாம் தம்பி, 'ஆட்டுக்கு வாலை அளந்து தான் வைத்திருக்கிறான்’ என்று சொல்கிறார் களே, அது எவ்வளவு சரியென்று இப்போது தான் தெரிகிறது' என்றது மாடு, -

சரி, காம் இருவரும் இந்தக் காளியை வேண்டிப் பழையபடியே கம் வால்களைப் பெற்றுக்கொள்வோம்' என்று சொல்லி,இரண்டும் தவம் இருந்து இரண்டும் பழையபடியே தம் வால் களைப் பெற்றுக்கொண்டன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/41&oldid=581238" இருந்து மீள்விக்கப்பட்டது