பக்கம்:தேன்பாகு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


51

கனகவல்லி பதில் பேசவில்லை. சாப்பிடப் போய்விட்டாள்.

இந்தப்பெண் என்ன கனவு காண்கிறதோ, தெரியவில்லையே?’ என்று மனதுக்குள் முனு முனுத்துக் கொண்டாள் தாய்.

அந்த காட்டு அரசனுடைய குமாரன் ஒரு நாள் அந்தக் கோவிலுக்கு வந்தான். கனகவல்லி குடம் குடமாகக் காவிரி நீர் எடுத்து வந்து கொட்டுவதைக் கவனித்தான்.

'ஏன் அம்மா, உனக்கு ஏதாவது பிரார்த் தனையா? ஒவ்வொரு நாளும் இப்படிச் செய்து வருகிறாயா?" என்று அவளைக் கேட்டான்.

ஆமாம்” என்று சுருக்கமாகப் பதில் அளித் தாள் அவள். -

'உன் பிரார்த்தனை நிறைவேறட்டும்!" என்று வாழ்த்திவிட்டு அவன் போனான். அவனுக்குத் தெரியுமா, அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது?

அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். பிறகு ஒரு பெருமூச்சு விட்டாள். . . • , . . . . .

அவளுடைய மாமன் மகன் சுப்பன் பார்ப்ப - தற்கு லட்சணமாக இருக்கமாட்டான். சப்பைத் காலும், கோணவாயும், ஒன்றரைக் கண்ணுமாக நிற்பான். அவனைப் பார்க்க அவளுக்கு அருவருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/53&oldid=581249" இருந்து மீள்விக்கப்பட்டது