பக்கம்:தேன்மழை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 15

                                     நெய்தல் நீர்


அணிமணிக் கடலின் காட்சி

      அரும்பொருட் காட்சி யாகும். 

துணையொடு கப்பல் நிற்கும்

      துறைமுகம், சுற்றம் சூழ 

மணவறை மீது தோன்றும்

      மங்கையைப் போன்ற தாகும். 

கணவனை இழந்த பெண்ணும்

     கலமற்ற கடலும் ஒன்றே!




அலையோசை சிறந்த ஒசை

     ஆதலின், அதனை யன்றிப் 

புலியோசை பூனை யோசைப்

     போர்க்களம் வழங்கும் ஒசை 

எலியோசை இவற்றை யெல்லாம்

     யாப்புநூல் ஏற்க வில்லை. 

கலையாத கடல்நீர் ஒசை

    கலிப்பாவின் ஒசை யன்றோ?




உரையிடை யிட்ட செய்யுள்

    ஒவியச் சிலம்பு தந்தோன் 

நரைதிரை வாரா முன்பே

    நாட்டிலோர் துறவி யானான். 

விரிகடல் பிறந்த போதே

    வெண்நரை பெற்றி ருந்தும் 

கருநிற உடையை மாற்றிக்

    காவியேன் கட்ட வில்லை?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/17&oldid=495472" இலிருந்து மீள்விக்கப்பட்டது