பக்கம்:தேன் சிட்டு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன் சிட்டு ii நேற்றுக் காலையிலே தேன் சிட்டும் மைனுவும் எங்கள் சிறிய தோட்டத்திலே சுறுசுறுப்போடு தங்கள் பணியிலே ஈடுபட்டிருந்தன. தேன் சிட்டுப் பறந்து பறந்து செடியின் கிளைகளில் அமர்ந்து மலர் களில் தேன் குடித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் நிறமான வாயையுடைய மைன நிலத்திலே நடந்து சென்று பூச்சி பிடித்துக்கொண்டிருந்தது. நான் அவற்றைக் கவனித்துக்கொண்டு அசையாது நின் றிருந்தேன். வயிற்றுக்கு உணவு தேடுவதிலே நாட்டங் கொண்டிருக்கும் அந்தக் குருவிகளின் செயல்கள் என் சிந்தனையைக் கிளறின. மைனுவைப் போலல்லாமல் தேன் சிட்டைப்போல மனிதன் வாழ முடியாதா என்ற கேள்வி என் உள்ளத்திலே எப்படியோ எழுந் தது. மனிதனுக்குச் சோறு வேண்டும். அவனை ஆட்டி வைக்கிற வலிமை வாய்ந்த சக்திகளென்று கருதப்படுபவைகளில் பசியும் ஒன்று. அந்தப் பசியின் சின்னமாக இருப்பது வயிறு. வாழ்க்கையில் இந்த வயிற்றுப்பாடே பெரும்பாடாக முடிந்திருக்கிறது. பொதுப்படையாகப் பார்க்கும்போது வயிற்றைத் திருப்தி செய்யும் முயற்சி மனிதனுக்கும் இந்தக் குருவிகளுக்கும் ஒன்றுதான். மனிதன் அந்த முயற்சி யிலே தேன் சிட்டைப் பின்பற்றக்கூடாதா என்பது தான் எனது கேள்வி. கரிச்சானையும் மைனுவையும் விட்டுத் தேன் சிட்டையே பின்பற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. உணவு தேடும் முயற்சியிலே மைனு தனது சொந்த இனத்திற்கு யாதொரு கொடுமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/12&oldid=926604" இருந்து மீள்விக்கப்பட்டது