பக்கம்:தேன் சிட்டு.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


} 4. தேன் சிட்டு ஆளுல் முயலை வெல்லவேண்டும் என்ற ஆவல் மட்டும் இருக்கிறது. இந்த ஆவல் ஆத்திரமாகவும் வெறி யாகவுங்கூட மாறுவதுண்டு. உலகத்தை நாம் நடுநிலைமையோடு நோக்கினுள் பலவேறு நாடுகளிலும், பலவேறு இனங்களிலும் இந்த இரண்டு சாதிகளினிடையே இன்று ஓயாத போட்டியிருப்பதை உணரலாம். ཊ་བིཀྐི, வேகத்திலே பித்துக் கொண்டவர்கள் உண்டு. ஒலியின் வேகத்தை முந்திக்கொண்டு பாய்ந்து செல்லக்கூடிய விமானங்கள், படைக்கலங்கள் தோன்றிவிட்டன. அவற்றைக் கண்டுகூட அவர்கள் பித்தம் தெளியவில்லை. அவற்றைவிட வேகமாகச் செல்ல வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படு கிரு.ர்கள். வேகமே ஒரு வெறியாகி விடுகிறது. -- ஒரே இடத்தில் நிலையாக அமர்ந்துகொண்டு அல்லது மெதுவாகத் தனிவழியில் சென்றுகொண்டு ஏதாவது ஒரு நல்ல கவிதையைப் படித்து அதன் கற்பனையோடு எனது உள்ளத்தையும் வேகமாக வானிலே பறக்கவிடுவதில் எனக்கு அடங்காத ஆசை யுண்டு. அந்த ஆசையால் மனேவேகங்கூடச் சில சம யங்களிலே எனக்கு ஆமை நடைபோலத் தோன்றும். அரிய செயல்களைச் செய்து சாதிக்கக்கூடிய மனத்திடன் பெற்றவர்கள் செயலிலே ஈடுபடு கிரு.ர்கள்; அப்படிப்பட்ட மனத்திடன் இல்லாதவர் களும் தன்னம்பிக்கை யற்றவர்களும் அவற்றைச் செய்து முடிப்பதாக மனக்கோட்டை கட்டிக் கொண்டு உளநிறைவு பெறுகிரு.ர்கள்” என்று உள வியல் கூறுகிறது. ஆனல் மனக்கோட்டை கட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/15&oldid=926607" இருந்து மீள்விக்கப்பட்டது