பக்கம்:தேன் சிட்டு.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49
அன்பு வழி

கட்டடங்கள் பல இடங்களிலே காட்சியளிக்கின்றன. போரால் எற்பட்ட நலிவு இன்னும் தீர்ந்தபாடில்லை. அதோடு போரிலே படுதோல்வியடைந்த நாடு உதவியளிக்க வேண்டிய பொறுப்பும் , வெற்றியடைந்த நாடுகளுககு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையிலுங்கூட உலகம் போரின் பயனற்ற தன்மையை நன்கு உணர்ந்துகொண்டதாகத் தெரிய வில்லை. இப்பொழுது மூன்றாவது உலகப் போரைப்பற்றிய பேச்சுக் கேட்கின்றது. அதற்கு ஆபத்தங்களும், அமைதிக்கு வழியென்கிற பெயரால், நடந்து கொண்டிருக்கின்றன.

படையைப் பெருக்கி அமைதியை நிலைநாட்டுவோம் என்று சொல்வதெல்லாம் பொருளற்ற வாசகமாகும். படையால் போர் நேருமேயன்றி அமைதி நிலைபெறாது. படை பெருகினால் ஐயம் பெருகுகின்றது. "அவன் ஐயாயிரம் வெடிகுண்டு விமானம் கட்டியிருக்கிறான்; ஆதலால் நான் பத்தாயிரம் கட்ட வேண்டும். அவனுடைய விமானம் மணிக்கு 500 மைல் பறக்கிறது; என்னுடைய விமானம் 600 மைலாவது பறக்கவேண்டும்; அப்பொழுதுதான் அவன் என்னிடம் சண்டைக்கு வரமாட்டான்" என்ற எண்ணத்தையே நாடுகளுக் கிடையில் விளைவிக்கிறது. படை பெருகப் பெருக இந்தப் போட்டியும் மும்முரமாகிறது; ஐயம் வலுக் கிறது. அவற்றின் பயனாக முதலில் உள்ளத்திலே அமைதி குலைகின்றது; பீதி தலையெடுகிறது. உலகம் அறிவை இழந்துவிடுகிறது. பிறகு போர் அரக்கனின் கோரக் காட்சி தோன்றுகிறது.

தே. சி -4