பக்கம்:தேன் சிட்டு.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


经 3. அமைதியும் இன்பமும் 5 லான நவீன வசதிகளே எதிர்பார்க்காதவர்கள் தங்கு வதற்கு நல்ல இடந்தான். நான் வீட்டை அடைகின்றபோது அன்றைய அஞ்சலில் வந்த செய்தித்தாள் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது. பட்டணத்தை மறந்து வந்தாலும் என்னல் இந்தச் செய்தித்தாளை மறக்க முடிவதில்லை. ஒரு நாளைக்காவது அதன் தரிசனம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதுபோல ஒரு மயக்கம் தட்டுகிறது. உலகத்திலேயே இல்லையோ என்றுகூட ஐயம் பிறந்துவிடுகிறது. செய்தித்தாளைத் திறந்தவுடன் எத்தனை அதிர்ச் சிகள்! எத்தனை வகையான உலக விவகாரங்கள்! அரசியல் சூதாட்டம், சூழ்ச்சி, சீர்திருத்தம், சட்டம், அடக்குமுறை, விடுதலை முயற்சி-இவைமட்டும் தான?-சாவொரு பக்கம், பிறப்பொரு பக்கம், விமான விபத்து, திருமணம், கொலை, களவு, தண்டனை-இவ்வாறு ஆயிரம் வகையான செய்தி கள் நம்மைத் தாக்குகின்றன. இந்தத் தாக்குத வில்லாவிட்டால் இன்று நம்மால் நாகரிக மக்க ளாக வாழ முடியாது. இது ஒருவகையான போதை மருந்தாகிவிட்டது. அதையுண்ட பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன். இப்படிக் கூறுவதால் நான் செய்தித்தாளின் பெருமையையும் பயனையும் உணர்ந்துகொள்ள வில்லையென்று யாரும் நினைக்கக்கூடாது. அவ்ற்றை யெல்லாம் நான் நன்கறிவேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/54&oldid=926649" இருந்து மீள்விக்கப்பட்டது