பக்கம்:தேன் சிட்டு.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55
அமைதியும் இன்பமும்


சூழ்ந்துள்ள அமைதியையும் பார்க்கும்பொழுது மனத்திற்கு தைரியம் வருகிறது.

அரசியல்வாதிகளும், அறிஞர்களும் உலகத்திலே யாருக்காக அமைதியை நிலைநாட்ட விரும்புகிறார்கள்? ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அந்தத் தோட்டக் காரனைப் போன்ற உலகமறியாத எளிய மக்களுக்கு அவர்கள் செய்யவேண்டிய கடமை தோன்றுகிறதல் லவா? அவன் அந்தச் சாமந்திப் பூவையே போன்றவன். கபடமில்லாதவன். பூக்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் தனது வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டிருந்தால் தானும் தன் மனைவி மக்களும் இன்பமாக வாழ முடியும் என்று எண்ணிக் கொண்டிருப்பவன். உலக அரங்கிலே நடைபெறுகின்ற சூழ்ச்சிகளை அறியாதவன். அவனைப் போலத் தான் வேறு தொழிலாளிகளும் இருக்கிறார்கள்; அவனைப் போலத்தான் பெரும்பகுதியான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய எளிய ஆசைகள் சிதறுண்டு போகாமல் காப்பது சமூகத் தலைவர்களின் கடமையல்லவா?

அந்தத் தோட்டக்காரன் உலகமறியாத எளிய மக்களின் பிரதிநிதி. அதேபோல அவன் வருங்கால மக்களுக்கும் பிரதிநிதி என்று கூறலாம். சிரித்த முகத்தோடு கபடமறியாமல் தோன்றும் குழந்தைகளை அவன் நினைவூட்டுகிறான். அந்தக் குழந்தைகளுக்கு இந்த மாநிலத்தை ஒரு இன்ப வீடாகச் சமைத்துத் தருகின்ற பொறுப்பு இந்தத் தலைமுறையிலுள்ள மக்களுக்கில்லையா?