பக்கம்:தேன் சிட்டு.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
57
அமைதியும் இன்பமும்

"அதற்கப்புறம் வேலை கிடையாதா?”

"அப்புறமும் வேலை இருக்கும்; வேலையில்லாமல் சோறு கிடைக்குமா? மலர்ந்த பூக்களையெல்லாம் பறிக்கவேணும். பட்டணத்துக்குப் பூ வாங்கி அனுப்புகிற வியாபாரிகள் அந்தியிலே வருவார்கள். அவர்கள் வருவதற்கு முன்னலே எல்லாம் சேகரம் செய்தாக வேண்டாமா?"

"இதிலே கிடைக்கிற வருமானம் உனக்குப் போதுமா?"

"இது போதும் சாமி. இந்தப் பூ சுகமா இருந்தால் போதும். அது எனக்கும் என் குடும்பத்துக்கும் சோறு போட்டுவிடும்.”

"அதற்குமேல் உனக்கு ஆசையில்லையா?”

"ஆசைக்கு அளவேது, சாமி? இந்தப் பக்கத்திலே இருக்கிற தோட்டமெல்லாம் எனக்கே இருக்கவேணும்னு ஆசை வரத்தான் செய்யுது. ஆனால் இன்னொருத்தர் வாயிலே மண்ணைப் போட்டுத் தானே அதையெல்லாம் நான் வைத்துக் கொள்ள வேணும்? நான் ஆசைப்பட்டால் இந்த ஊருக்கு நூறு ஏக்கராநிலம் எங்கிருந்தாவது புதுசா வருமா? இருக்கிற நிலந்தானே இருக்கும்? எல்லோரும் அப்படியே ஆசைப்பட்டால் அப்புறம் என்ன நடக்கும் ? ஒருத்தனை ஒருத்தன் கழுத்தைத் திருகவேண்டியது தான். அந்த நினைப்பை விட்டுப்போட்டு இருக்கிற நிலத்துக்கு நல்லா எருப்போட்டுப் பாடுபட்டா இன்னும் நிறையப் பலன் கிடைக்கும்." வேறொருத்தர்