பக்கம்:தேன் சிட்டு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லி வாழ்க்கை

63


இவ்வாறு எனது சிந்தனை மானிட சாதியின் பல்லி வாழ்க்கையைப் பற்றி நின்றபோது உள்ளம் தானாகவே குறுகுறுத்தது. இதுதான் தருணமென்று மனச்சான்று எழுந்து மார்பை நிமிர்த்தி நின்று போசத் தொடங்கிற்று.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனச்சான்று என்று ஒன்றிருக்கிறதல்லவா? செல்லக் கூடாத நெறிகளி லெல்லாம் செல்லுவதற்கு மனம் ஆசைப்படும். இந்த மனச்சான்று அதைத் தடுக்க முயலும். பல சமயங்களிலே மனச்சான்று தோற்றுப் போகும். ஆனால் சில சமயங்கள் அதற்குப் பெரிதும் சாதகமாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் இப்பொழுது எனது மனச்சான்றுக்கும் வந்திருக்கிறது.

"உலகத்தைப் பற்றியெல்லாம் குற்ற விசாரணை செய்யப் புறப்பட்டு விட்டாயே, உனது நெஞ்சத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டாயா? புத்தருடைய படத்தை எதிரிலே வைத்துக் கொண்டிருக்கிறாயே, அது எதற்கு? புத்தரைப் போல அன்பு வாழ்விலே தோய்ந்தவனென்று உன்னைப் பார்க்க வருகிறவர்கள் நம்ப வேண்டுமென்பதுதானே உன்னுடைய விருப்பம்? உண்மையிலேயே அவரைப் பின்பற்ற நீ முயன்றிருக்கி றாயா? சற்று முன்புகூட நீ எதற்காக அடிக்கோலை ஓங்கினாய்? நீ பேசுவதையும், எழுதுவதையும் பின்பற்றி நடக்க முயன்றிருக்கிறாயா? அந்த முயற்சியில் மனதார ஈடுபட்டாயா? அதில் தவறியபோது அதற்காக வருந்தி மீண்டும் அதே தவறைச் செய்யக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/64&oldid=1155358" இலிருந்து மீள்விக்கப்பட்டது