பக்கம்:தேன் சிட்டு.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 தேன் சிட்டு கூடாது என்ருவது உறுதி செய்து கொண்டிருக் கிருயா? அந்த எண்ணம் ஒன்றிருந்தாலே போதும். அது உண்டா? எண்ணிப் பார்” என்று மனச்சான்று மளமளவென்று பொழிந்தது. அதை எதிர்த்துப் போர் தொடுக்க அந்த வேளையிலே எனது உள்ளத் திற்குத் துணிச்சல் வரவில்லை. அது பெட்டிப் பாம்பைப்போல அடங்கிக்கொண்டது. பல்லியை அடிக்க மறுபடியும் நான் முயலவில்லை. என்னுடைய குறைகளையும் தவறுகளையும் பற்றிய ஆராய்ச்சியில் அழுந்தினேன். இவ்வாறு என்னையே நான் எண்ணிப் பார்த்துக் கொள்வதற்குத் துண்டு கோலாக இருந்த அந்தப் பல்லியை எனது குருவாகக் கூட மதிக்கலாம் என்ற உணர்ச்சி மெதுவாக மேலெழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/65&oldid=926661" இருந்து மீள்விக்கப்பட்டது