பக்கம்:தேவநேயம் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம் பாவாணர்

பாவாணர்

ix



ஞாலத்தார் பண்டுமுதல் கொடுப்பர்; இந்த
     நல்லதொரு வரலாற்றைக் 'கூலி' காட்டுங்
கோலத்தைப் பாவாணர் விளக்கக் கேட்டே
     குதிபோடும் தமிழ்நெஞ்சம் புதுமை கண்டே!

கற்கையிலே நமைமருட்டும் அரிய சொற்கள்
     காண்அகர முதலியினால் எளிய வாகும்;
நெற்கதிரின் மணிகளைப்போல் சொற்பொ ருள்கள்
     நிகண்டுகளில் பதிந்திருக்கும்; இவற்றில் காணாச்
சொற்கள்தம் பொருள்மூலம் காட்டிப் பின்னர்
     தோன்றிவளர் மாற்றத்தை நிரல்ப டுத்தி
விற்கணையின் கூரறிவுப் பாவா ணர்தாம்
     விளக்குகையில் ஆ! ஆ! ஆ! வியக்கின் றோம்நாம்!

கிளைபார்ப்பார் பூகாய்கள் கனிகள் பார்ப்பார்.
     கீழிருக்கும் அடிமரத்தின் வேர்கள் தம்மின்
நிலைபார்ப்பார் அரிதாவார்; வைக்கம் வீரர்
     நிலம்புதைந்த வேர்பார்த்தார், வெந்நீர் ஊற்றும்
'கலை'வல்லார் சூழ்ச்சிதனை எதிர்த்து நின்றார்.
     கனிதமிழின் ஆணிவேர் பக்க வேர்கள்
அலைஅலையாய் உலகெங்கும் பரந்து செல்லும்
     அருமையினைப் பாவாணர் ஆய்ந்து சொன்னார்!

'நாவுதல்'என் றால்'கொழித்தல்'; சுளகு கொண்டு
     நல்லரிசி யுடன்கலந்த கல்லை நீக்க
நாவிடுவார் மேல்கீழாய்த் தமிழப் பெண்டிர்;
     நாவிக்கொண் டேகடலில் செல்க லத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/10&oldid=1479799" இலிருந்து மீள்விக்கப்பட்டது