பக்கம்:தேவநேயம் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

தேவநேயம்

நம் பாவாணர்



'நாவாய்'என் றதனால்தான் குறித்தார்; இச்சொல்
     நவில்ஆங்கி லம்இலத்தீன் வடமொ ழிக்கண்
'நேவி' 'நேவிசு' 'நவ்' வென்று திரிந்த வாற்றை
     நெஞ்சங்கொள் வகையுரைத்தார் தேவ நேயர்!

'தாழ்வுணர்ச்சி வயப்பட்டே குனிந்து நிற்கும்
     தமிழ்மகனே! தென்குமரிக் கண்டம் இன்று
ஆழ்கடலுள் சென்றாலும் உலகில் மாந்தன்
     அங்கேதான் பிறப்பெடுத்தான், அவன்உன் முன்னோன்;
வாழ்உலக முதன்மொழிஉன் தாய்த மிழ்தான்;
     வடமொழியின் மூலாம்,அதே திரவி டத்தாய்;
தாழ்வுணர்ச்சி விட்டொழிப்பாய், நிமிர்வாய்' என்றார்
     தமக்குவமை இல்லாத நம்பா வாணர்!

பழம்பெருமை மட்டும் அவர் பேச வில்லை ;
     பண்பாட்டுச் சிதைவுகளை, தமிழ ரைக்கீழ்
விழச்செய்த சூழ்ச்சிகளைத் துருவிக் காட்டி
     வேற்றவர்யார்? நம்மவர்யார்? வருங்கா லத்தில்
எழத்தமிழா என்னென்ன செய்ய வேண்டும்
     என்பவற்றைத் தெளிவாகக் காட்டும் நூல்கள்
தொழத்தகுநம் பாவாணர் தொடர்ந்து தந்தார்.
     தூங்கியிருந் தோர்விழித்தார்; எழுச்சி கொண்டார்!

எத்தனையோ மொழியறிந்த பாவா ணர்தாம்
     எழுதுவதும் பேசுவதும் தூய்த மிழ்தான்!
முத்தனைய பழமொழிகள் உவமைப் பூக்கள்
     மொய்த்துமணங் கமழும்நடை அவர்ந டைதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/11&oldid=1479895" இலிருந்து மீள்விக்கப்பட்டது