பக்கம்:தேவநேயம் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 83 அம் என்பது பொருந்துதல் அடிப்படையினது அமல், அமைதல் , அவை, அமர்தல், அமையம், அம்முதல் என்னும் சொற்களை நோக்கிய அளவில் பொருந்துதல் புலப்படும். அர் என்பது அறுத்தல் கருத்து வேர் என்பதை அரம், அரங்கு, அரிதல், அரிவாள், அருகுதல், அரை, அறை, அறுகு என்பவற்றை நோக்க எளிதில் அறியலாம். இல் என்பது இளமைக் கருத்து வேராதலை இளமை, இலவு, இலம்பாடு, இலை, இளகு, இளைத்தல், எள், எள்கு, எஃகு, எய்ப்பு, ஏள் ஏழை என்பவற்றால் தெளியலாம். இள் என்பது இணைதற் கருத்து வேர் ஆகும். இதனை இழை, இழைதல், இணங்கு, இணைதல், இயை, இசைவு, ஏய் என்பவற்றால் காணலாம். உ என்பது சுட்டு, அது முன்னைக் கருத்தையும் உயரத்தையும் குறிக்கும். உது, உங்கு, உவன், ஊங்கு உக்கம், உச்சம், உம்பர், உயர், ஊர்தல், ஓங்கல் முதலியவற்றைக் கருத இப்பொருள் புலப்படும். உகரம் பக்கத் திரிபு, பின்னைத் திரிபு, மெய்ம் முதற் சேர்க்கை பெறுதலையும் எடுத்துக் காட்டுகிறார் பாவாணர். இவ்வாறே, 'உம்' கூடுதற் கருத்தையும் 'உய்' செல்லுதல் கருத்தையும் “உள்” என்பது துளைத்தற் கருத்தையும் 'ஒல்' என்பது பொருந்துதற் கருத்தையும் குறித்தலை விரித்தெழுதுகிறார். உல் என்பது முக்கருத்துகள் பெறுதலையும். ஊதுவும் ஓவும் ஒலிக் குறிப்பாதலையும் சுட்டினோம். ஏ என்னும் வேர் தன்மைப் பெயரடியாகவும், வினாச்சொல் அடியாகவும் வருதலை விளக்கித் தெளிவிக்கிறார். இனி இரண்டாம் பகுதியாகிய உயிர்மெய்ம் முதல் வேர்ச்சொற்கள் கல்,குல், சுல், துல் என நான்கு காட்டுகிறார். இவற்றுள் கல் என்பது கருமைக் கருத்து என்பதைக் கஃறு, கல். கால், கள், களங்கம், காள், காளி, கர், கரி, கரு, கருப்பு, கார் முதலிய சொற்கள் வழியாக நிறுவுகிறார். குல் என்பது குலம், குலை, கலம் களம் முதலாம் கூடற் கருத்து வேராகவும், குளகு, குழ, குரு முதலிய தோன்றற் கருத்து வேராகவும், குலவு, குளம், குரங்கு, கோல் முதலிய வளைதற் கருத்து வேராகவும், குளவி, குகண்டு, குட்டு, குத்து, குதிர் முதலாம் குத்தற்கருத்து வேராகவும் குரு, குருதி, குதம், கதம் , கனல் முதலாம் எரிதற் கருத்து வேராகவும் குரல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/100&oldid=1431423" இலிருந்து மீள்விக்கப்பட்டது