பக்கம்:தேவநேயம் 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

841 தேவநேயம் தேவநேயம் கல் கன்னம், குளி, குழிவு முதலாம் துளைத்தற் கருத்து வேராகவும் இருத்தலை ஆறுகட்டுரைகளில் விரித்துக் காட்டுகிறார். சுல் என்பது குத்தற்கருத்து (சூல், சூலம் சுள். சுணை ) சுடுதற்கருத்து (சுள்ளாப்பு, சுள்ளை சுடலை சூடு சுண்ணம்) சிவத்தற் கருத்து (கல்லம், சேல், செள், செய், செம்மை ) வளைதற் கருத்து (சுலவு, சிலந்தி, சூல், சுளி, சுழல்) துளைத்தற் கருத்து (சுனை, சோனை, சுரப்பு, சுரங்கம் , சொள்ளை ) ஆகியவற்றில் வருதலை விளக்குகிறார். மொழியாராய்ச்சியும், சொல்லாராய்ச்சியும் செய்யாத பலர், இக்கட்டுரைகள் சொற்களின் திரிபையே காட்டுகின்றன என்றும் அவற்றையாளும் நெறிமுறைகளைக் காட்டவில்லை என்றும் குறைகூறினராக, "ஒவ்வொரு கலைக்கும் அறிவியற்கும் தெரிவியல் புரிவியல் என இரு கூறுகள் உள தெரிவியலை விரிவாகக் கற்பிக்கும் போது புரிவியலைக் காட்டுவதும், புரிவியலை விளக்கமாகக் காட்டுமிடத்துத் தெரிவியலைக் கற்பிப்பதும் வழக்கமன்று" என்று மறுக்கிறார். மேலும், ஐம்பான் ஆண்டாக மொழியாராய்ச்சி செய்யும் ஒருவனை நெறிமுறை யறியாது குருட்டுத் தனமாக வரைபவன் என்பது அறியாமையொடு அழுக்காறும் கலந்த இருட்டடிப்பு என்று வெறுத்தொறுக்கும் பாவாணர், "என்வேர்ச் சொற் கட்டுரைகளில் எடுத்துக்காட்டும் சொற்களினின்றே எழுத்தும் சொல்லும் திரியும் முறைகளைப் பொது அளவு மதியுள்ள எவரும் அறிந்து கொள்ளலாம்” என்கிறார். (202, 203} நிறைவாக உள்ள துல் என்பது பொருந்துதற் கருத்து, வளைதற் கருத்து, துளைத்தற் கருத்து, தெளிவுக் கருத்து என நாற்கருத்துகளில் அமைதலை நிறுவுகிறார். வேர்சொற்கட்டுரைகள் சை.சி.நூ.க வெளியீடாக 1973ல் வெளிவந்தது. விலை உருபா 10. மொத்தப்பக்கங்கள் 300. 32. வேர்ச் சொற்சுவடி தமிழில் வேர்ச்சொல் ஆய்வு மூலவராகத் திகழ்ந்தவர் பாவாணர், தமிழில் வல்ல அறிஞராலும் வேர்ச்சொல் ஆய்வு என்பது அறியப்படாத கால நிலையில் அத்துறையில் இறங்கி வாழ்நாள் அளவும் நிகரற்ற வேர்ச்சொல் ஆய்வாளியாகவே திகழ்ந்தவர் பாவாணர். 1940இல் ஒப்பியல் மொழி நூல் இயற்றித் தாமே வெளி யிட்டவர் பாவாணர். அக்காலம் திருச்சி பிசப்பு ஈபர் மேற்காணியார் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார். அப்பொழுது வேர்ச்சொல் சுவடி என ஒன்று எழுத இருப்பதைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் வ. சுப்பையா பிள்ளைக்கு எழுதினார். கழக ஆட்சியாளர் "வேர்ச்சொல்”லுக்கு மாதிரி எழுதக் கேட்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/101&oldid=1431424" இலிருந்து மீள்விக்கப்பட்டது