பக்கம்:தேவநேயம் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 85 "வேர்ச்சொல் வரிசையைப் பற்றி நீங்கள் மாதிரி கேட்பது வியப்பாயிருக்கிறது. உங்கள் ஐயத்தையும் குறிக்கிறது. அறிஞரை நம்பி அவர்வயின் நல்வினையை ஒப்புவிக்கும் திறன் இன்னும் நம்மவர்க்கு ஏற்படவில்லை. ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும் மாதிரி தருகிறேன்" என எழுதுகிறார் பாவாணர் (31740) 29.8.40ல் "ஒரு பக்கத்தில் 4 வேர் சொற்றிரிபுகள் அடங்குமளவு (25 பக்கம் வருமாறு) 100 முக்கியமான வேர்களைப் பற்றி எழுதி அனுப்புவேன்” என்கிறார்.14940இல் வேர்ச்சொல் சுவடியை முடித்து விடுக்கிறார். அந்நூல் அச்சிடப்படாமலே நின்று விட்டது. பாவாணர் வாழ்நாள் அளவும்., கழக ஆட்சியர் வாழ்நாள் அளவும் அச்சில் வரவில்லை. பாவாணர் கடிதங்களைத் தொகுக்கும் போது அச்சிடாமல் நின்ற வேர்ச்சொற் சுவடியின் பாவாணரின் மூலக்கைப் படி கிடைத்தது. அதில் 73 சொற்களுக்கே வேர்விளக்கம் கிடைத்தது. "அர் 'முதல் 'வேள்' வரை அகரநிரலில் அவை இருந்தன. “வணங்கு என்பதன் கீழ் வாங்கு - வளை என்பதையும் சேர்த்துக் கொள்க” | "கீழ் மேல் முதலிய சொற்களுடன் கீழோர், கீழை, கிழக்கத்திய, மேலோர், மேலை, மேற்கத்திய முதலியவைகளை வேண்டுமாயின் சேர்த்துக்கொள்ளலாம்." என்று சுவடியை அனுப்பிய பின் பாவாணர் வரைந்துள்ளார். ஆனால் இச்சொற்களுள் எதுவும் வேர்ச்சொற் சுவடியில் இடம் பெறவில்லை. அதனால் பாவாணர் நூறு சொற்களுக்கு எழுதி விடுத்திருக்க வேண்டும் என்றும், அவற்றுள் சில சொல் விளக்கக் குறிப்புகள் விடுபட்டிருக்க வேண்டும் என்றும் தெளிவு கொள்ளலாம். வேர்ச்சொற் சுவடி கழக வெளியீடு எண். 1816. ஆக 1986ல் வெளிவந்தது. பதிப்புப் பணி செய்தவன் யான். பாவாணர் மாதிரியாக எழுதியனுப்பிய 'இறு' என்னும் சொல் இறை, இறால், இறாட்டி, இறுத்தல், இறையன், இறப்பு, இறவாணம், இறகு, இறங்கு என்பவற்றை யெல்லாம் விரிவாக விளக்குகின்றது. வேள் என்னும் சொல் வேணவா, வேண்டு, வேள்வி, வேட்கை, வேட்டம், வேட்டை வேளாண், வேளாண்மை வேளான், வேளாளன், வேட்கோ , வேடுவன், வேடன் என விரிதலை விளக்குகின்றது. வேர்ச்சொற் சுவடியில் இடம் பெற்றுள்ள 73 சொற்களுள் ஓரெழுத்து வேர்கள் 18. ஈரெழுத்து வேர்கள் 55. ஒரு வேர் பொருள் வேறுபடுதல் வகையால், தனிச் சொல்லாக எண்ணப்படுதலால், 'ஏ' என்பது நான்கு விளக்கங்களையும் 'அர்' என்பது மூன்று விளக்கங்களையும் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/102&oldid=1431452" இலிருந்து மீள்விக்கப்பட்டது