பக்கம்:தேவநேயம் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் ஏ-உயர்வுக் குறிப்பு வகையில் ஏண், ஏணி, ஏணை, ஏத்து, ஏங்கு, ஏய், ஏர், ஏல், ஏழ், ஏறு, ஏற்றம், என்னும் பொருள்களிலும் மேற்செலற் குறிப்பு வகையில் ஏவு, ஏகு, எண், எண்ணம் என்னும் பொருள்களிலும், மேலெழற் குறிப்பு வகையில், ஏழ், எக்கு, எக்கர் , எடு, எம்பு, எவ்வு என்னும் பொருள்களிலும் வினாவுதற் குறிப்பு வகையில் எது? எங்கு? என்று? என்பவற்றிலும் வருதலை எடுத்துக் காட்டுகிறார் இவ்வாறே பிறவுமாம். 'அருமருந்தன்ன' என்பது 'அருமந்த' என்றாயிற்று என்பது நூல்வழக்கு, 'அருமை வந்த' என்பது, 'அருமந்த' என்றாயிற்று என்பது இச்சுவடி (3) 'புறா' என்பதன் பொருள் 'புறவப் பறவை' (முல்லைநிலப் பறவை புறா)' என்பது இச்சுவடியால் அறியப்படுகிறது. (13) இளகிய இரும்பு 'எஃகு' என்பது அறியப்படுவது. அது, 'எள்கு' என்பது 'எஃகு' என ஆயதை இச்சுவடியால் அறியலாம் (11) 'இராகி' என்பது கேழ்வரகு, தமிழகக் கூலங்களுள் ஒன்றாகிய அதன்பொருள் புலப்படுமாறு இல்லை. இரத்தம் இரத்தி என்பவை போலச் சிவந்த கூலம் இராகி ஆயது என இதனால் அறியலாம் (5) மெத்து என்பது மாடிக்கு உயர்வுக்கு ஒரு பெயர். மெத்தை என்பதும் உயரப் பொருள் தருவதே. 'மெச்சு'தல் என்பது உயர்த்திக் கூறல், பாராட்டல் எனப் பொருளறிய வரும் போது மெச்சவே செய்கிறோம். (40) வேர்ச்சொல் மாதிரியாகப் பாவாணர் காட்டிய 'வேள்' என்பதன் விரிவு கடிதத்தால் அறியப்பட்டு, அது பதிப்பாசிரியன் பகர்வில் இடம் பெற்றது. அது: வேள் + வேண் (வேண் - அவா = வேணவா) வேள் + து = வேண்டு வேள் + வி = வேள்வி வேள் + கை = வேட்கை வேள் + தம் = வேட்டம் வேள் + தை = வேட்டை வேள் (பெ) வேள் + ஆண் = வேளாண் வேள் + ஆண்மை = வேளாண்மை வேள் + ஆளன் = வேளாளன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/103&oldid=1431453" இலிருந்து மீள்விக்கப்பட்டது