பக்கம்:தேவநேயம் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் உலகத் தமிழ்ப் பேரவைகள் என்னும் மூன்றாம் பகுதி உலகத் தமிழ்மாநாட்டு நடைமுறை பற்றியது. தமிழ்மாநாடு, தமிழ்மாநாடாகவும் தமிழர் மாநாடாகவும் விளங்கவேண்டும் என்னும் வேட்கையில் கிளர்ந்தது அது, 31. வேர்ச்சொற் கட்டுரைகள் செந்தமிழ்ச் செல்வியில் தொடர்கட்டுரைகளாக வெளிவந்து நூலுருப் பெற்றது 'வேர்ச்சொற்கட்டுரைகள்' என்னும் நூலாகும். இதன்கண் உயிர் முதல் வேர்ச்சொற்கள் 15 கட்டுரைகளும் உயிர்மெய்ம் முதல் வேர்ச்சொற்கள் 16 கட்டுரைகளும் ஆக 31 கட்டுரைகள் உள. வேரின் வளர்ச்சி அடியும், அடியின் வளர்ச்சியே முதனிலை யும் ஆகும் என்பதைக் "குல், குழு, குழுவு" என எடுத்துக் காட்டி விளக்குகிறார். வேருக்கு மூலமான முளையும், முளைக்கு மூலமான வித்தும் உண்டு என்பதை உல் (முளை) குல் (வேர்) என்றும், உ (விதை) உல் (முளை) என்றும் தெளிவு செய்கிறார். வேரும், ஆணிவேர் பக்கவேர் கிளைவேர் சிறுகிளைவேர் எனப்பலதிறப்படும் என்று எடுத்துக்காட்டுகிறார். "ஒரு கருத்தில் இருந்து மற்றொரு கருத்துத் தோன்றும் போது, ஒரு சொல்லில் இருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டா கின்றது” "மக்களைப் போன்றே சொற்களும் குடும்பம் குடும்பமாகவும் குலம் குலமாகவும் இனம் இனமாகவும் கொடிவழி முறையில் இயங்குகின்றன. மலையா, சிங்கபுரம், தென்னாப்பிரிக்கா முதலிய வெளிநாடு கட்குத் தனித் தனியாகவும் குடும்பம் குடும்பமாகவும் தமிழர் சென்று அங்கு நிலையாக வாழினும், அவர்களின் முன்னோராலும் தமிழ்நாட்டு உறவினராலும் அவர்கள் தமிழர் என்றே அறியப் படுதல் போல், தமிழ்ச் சொற்களும் அண்மையிலும் சேய்மையிலும் உள்ள அயன் மொழிகளிற் சென்று வழங்கினும் அவற்றின் மூலத்தினாலும் தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும்" என்பவை ஆசிரியன் முகவுரையில் சுட்டும் குறிப்புகள், உயிர் முதல் வேர்ச்சொற்கள் அம், அர், இல், இள், உ.உம், உய், உல், உள், ஊது, ஏ ஒல், ஓ என்பவை. இவற்றுள் ஊது, ஓ என்பவை ஒலிக்குறிப்பு வேர்ச்சொற்கள். 'உல்' என்பது எரிதல், வளைதல், உள்ளொடுங்கல் ஆகிய முக்கருத்துவேர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/99&oldid=1431422" இலிருந்து மீள்விக்கப்பட்டது