பக்கம்:தேவநேயம் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் 81 மொழி முதலாக நூற்றுக்கணக்கான சொற்களில் இடம் பெற் றுள்ளமையைக் காட்டி நிலைப்படுத்துகிறார் (7-9) தமிழை, வடமொழி வழிப்பட்டதாகக் காட்டுவாரையெலாம் பட்டியலிட்டுக் காட்டி, அவர்தம் கருத்துகள் ஒவ்வொன்றையும் விரிவாக மறுத்துரைக்கும் பாங்கு பாவாணர் ஏரண முறைத் தெளிவை அருமையாய் வெளிபடுத்துகின்றது (27-63) இப்பகுதியில் கிரேக்கத்தில் தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்கில் உள்ளமையைச் சுட்டும் பாவாணர் அவற்றுள் 172 சொற்களை எடுத்துக் காட்டுகிறார் (58-63) "ஒருமொழியில் ஓர் அகரமுதலி தொகுத்தற்கோ திருத்து தற்கோ இலக்கண அறிவு, சொல்லாராய்ச்சி , மொழியாராய்ச்சி, சொற்றொகுப்பு ஆகிய நாற்றிறம் வேண்டும்” என்பது அழுந்திய பயிற்சி வெளிப்பாடு (67) 'மொழிநூற் கலையைக் கண்திறந்து விட்டவர் வில்லியம் சோன்சு” என்றும், ஒப்பியன் மொழி நூல் அவர்காலத்தில் இருந்தே வளரத் தொடங்கியது என்றும் மேலை மொழிநூல் வரலாற்றில் குறிக்கிறார். (71) மேலை மொழி நூலார் மூன்று நூற்றாண்டுகளாக ஆய்ந்தும் உண்மை காண முடியாமை, முந்தியல் இயன்மொழியாய தமிழை அடிப்படையாகக் கொள்ளாது பிந்தியல் திரிமொழியாகிய சமற் கிருதத்தை அல்லது ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டதே கரணியம்" என்கிறார் (89) வண்ணனை மொழி நூலின் வழுக்களை அடிப்படைத் தவறு, நெறிமுறைத் தவறு என இருபாற்படுத்தி விரியக் கூறும் பாவாணர், "வயிரக் கற்களின் உயர்வு தாழ்வை மணிநோட்டகள் கண்ணே காண்பதுபோல், சொற்களின் வேரையும் பொருட் கரணியத்தையும் மொழிநூல் வல்லான் அகக் கண்ணே காணும் என்றும், அறிவொடு உயிரும் அற்ற அஃறிணைக் கருவிகள் காணா வென்றும் அறியல் வேண்டும்” என்கிறார் (105) குமரிநாட்டுத் தமிழரின் வரலாற்றிற் கெட்டாக் தொன்மை யையும், அக்காலமக்களின் எஃகுச் செவியையும், நுண்ணுணர்வை யும் நோக்கின் எழுத்துக்களின் தன்மையையும் வகைகளையும் மாத்திரை அளவையும் அவை தோன்றும் இடங்களையும் அவற்றின் பிறப்போடு தொடர்புள்ள உறுப்புக்களையும் பற்றி, தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ள அளவே பண்டையர்க்குப் போதுமென்றும், அதிலிருந்து வண்ணனை மொழி நூலார் இக்காலத்தில் கூறும் நுட்பங்களையும் அவர்கள் அறிந்துகொள்ளக் கூடுமென்றும் உய்த்துணரலாம் என அப் பகுதியை முடிக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/98&oldid=1431421" இலிருந்து மீள்விக்கப்பட்டது