பக்கம்:தேவநேயம் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநேயம் தேவநேயம் முதல் முதல் இலக்கணம் இயற்றப்பெற்ற தமிழில் தான் மொழிநூல் தோன்றியது. ஒரு பொருளின் உண்மையை ஒப்புக் கொள்ளுவதற்கு நடுநிலைமையும் வேண்டும் என இம்முகவுரையில் சுட்டுகிறார் பாவாணர். "சமற்கிருதத்தைப் பரப்புதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பூனாத் தெக்காணக் கல்லூரியின் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்பெறும் வேனிற் பள்ளியில் அறுகிழமையும் இலையுதிர் காலப்பள்ளியில் முக்கிழமையும் பயிற்சி பெற்ற அளவிலேயே வண்ணனை மொழிநூல் அறிஞராகக் கிளம்பும் ஆங்கில பட்டந் தாங்கியரான மாணவர், தமிழிலக்கியப் பரப்பையும், பொருளிலக்கணச் சிறப்பையும், குமரிநாட்டுத் தமிழ்ப் பிறப்பையும் எங்ஙனம் அறியவல்லார்?” என வினாவுகிறார். மொழி நூல், வண்ணனை மொழி நூல், உலகத் தமிழ்ப் பேரவைகள் என்னும் முப்பெரும் பகுப்பும், பதினாறு உட்பகுப்பும் உடையது இந்நூல். மொழி நூல், மொழி நூல் தோற்றம், மொழிநூல் முதன்மை, தமிழின் தொன்மை, தமிழ் மறைப்பு, மறைமலையடிகள் மாண்பு, வடவர் மொழி நூல், மேலை மொழி நூல் வரலாறு, உலக மொழிக் குடும்பங்கள், மொழித்தோற்றக் கொள்கைகள் என்பவை முதற் பெரும் பகுப்பைச் சார்ந்தவை. இவையே நூலின் மூன்றில் இரண்டு பங்காகும். (பக்கம் 89} "மொழி நூல் என்பது ஒரு மொழியின் அல்லது மொழிக் குடும்பத்தின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு சிறப்பியல், இனமொழி அல்லது இனமொழிக் குடும்பம் முதலிய வரலாற்றுக் கூறுகளை யெல்லாம் விளக்கிக் கூறும் அறிவியல்” என மொழி நூல் இயல் வரையறையில் வகுத்துக் கொண்டு நூலைத் தொடங்குகிறார். "ஒரே மொழி பற்றியதை அம்மொழியின் பெயராலும், ஒரே மொழிக் குடும்பம் பற்றியதை அக்குடும்பத்தின் பெயராலும், பல்வேறு மொழிக் குடும்பம் பற்றியதை ஒப்பியலின் பேராலும் குறிப்பது வழக்கம்” என்று வரம்பிடும் பாவாணர், தமிழ்மொழி நூல், தமிழிய மொழி நூல், ஒப்பியன் மொழிநூல் என முறையே எடுத்துக் காட்டுகிறார் (1) திசைச்சொல் என்பது வேற்றுமொழிச் சொல் அன்று, அது செந்தமிழ் நிலத்து வழங்காது கொடுந்தமிழ் நிலங்களில் மட்டும் வழங்கிய திருந்திய சொற்களும் சொல்வழக்குகளுமே என்று உறுதிப்படுத்துகிறார். திசைச் சொல் என்பது அயன்மொழிச் சொல்லன்று என முடிவு செய்கிறார் (3) "மொழி நூல், ஒரு நூற்பாவின் உண்மைப் பாடத்தையும் வழுவையும் அறிந்து கொள்ள உதவுகின்றது” என்பதைச் சகரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/97&oldid=1431420" இலிருந்து மீள்விக்கப்பட்டது