பக்கம்:தேவநேயம் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் நூற் கருக்கம் பாவாணர் வரலாறு மறைப்பு, தமிழன் பிறந்தக மறைப்பு, தமிழ்நாடு மறைப்பு, தமிழ் இன மறைப்பு, வனப்புக்கதை மறைப்பு, பொருளிலக்கண மறைப்பு, புலவரை மறைப்பு, மொழியாக்க முயற்சித் தடுப்பு, தனித்தமிழ் வழக்குத் தடுப்பு, தமிழ்ப் பற்றுத் தடுப்பு, தமிழ்விழாத் தடுப்பு, தமிழ்ப் புலவர் பதவிப்பேறு தடுப்பு, தமிழ்த்தொண்டர் வாழ்வுத் தடுப்பு முதலியன என்று தொகுத்துச் சுட்டி இயன்ற அளவில் விரித்துரைக்கிறார். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி வழியாக இம்மறைப்புச் சான்றுகளை விரிய எடுத்துக் காட்டுகிறார். | நீலகண்ட சாத்திரியார், சுப்பிரமணிய சாத்திரியார், சட்டர்சி ஆயோர் ஆய்வுரைக் கேடுகளைச்சுட்டிக் காட்டுவதுடன் “இன்று தமிழைக் கெடுப்பவர் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் அரசியற் கட்சித் தலைவருமாகிய இருசாராரே” என்கிறார். தமிழ் மறைப்பதிகாரத்தில் விடுபட்ட இருசொற்கள் என அம்மணம், மடம் என்பவற்றை இணைத்து விளக்குகிறார். முடிபதிகாரம் 16 வெண்பாக்களையுடையது.

  • மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க - பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்காண், முன்போல்

தமிழுயரத் தானுயர்வான் தான் " என்பதில் ஒரு பாட்டு இது (10) 30. வண்ணனை மொழிநூலின் வழுவியல் பாவாணர் காட்டுப்பாடியில் வாழ்ந்த நாளில் 1968 இல் வெளிவந்த நூல் இது, 2 உருபா விலையில் நேசமணி பதிப்பக வெளியீடாக மலர்ந்தது. முகவுரை 2 பக்கம். நூல் 122 பக்கம். "ஆரிய விளம்பரத்தின் விளைவாக மறைந்து கிடக்கும் தமிழைப் பற்றிய உண்மைகளை அறிதற்குத் தடையாக வுள்ள வண்ணனை மொழி நூலின் வழுவியலை, மொழிநூல் வல்லாரும் கண்டறிந்து கொள்ளுமாறு இச்சிறு நூலை எழுதத் துணிந்தேன்” என்பதால் நூல் இயற்றிய நோக்கைப் பளிச்சிடச் செய்கிறார் பாவாணர். ஆங்கிலவர்கள் கண்டதால் உயர்ந்தது வண்ணனை மொழிநூல் எனல் ஆகாது என்பதை, “வெள்ளை என்னும் சொல் வெண்ணிறக் கருத்தடிப்படையில் தூய்மையை மட்டுமன்றி வெறுமையையும் குறிக்கும்” என்கிறார். ஆங்கிலவரை வெள்ளையர் என்று சுட்டுவது வழக்கம் அல்லவா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/96&oldid=1431419" இலிருந்து மீள்விக்கப்பட்டது