பக்கம்:தேவநேயம் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

78 தேவநேயம் தேவநேயம் ஐந்ததிகாரங்களைக் கொண்ட இந்நூலுள் மொழியதிகாரம் 24! பக்கங்கள். மற்றை அதிகாரங்கள் நான்கும் 52 பக்கங்கள். முடிபதிகாரம் வெண்பா 16 மட்டுமே கொண்டது. மொழியதிகாரச் சிறப்பு, அகராதி அமைப்பாகும். மேலை யாரிய இனச் சொற்கள் பிராகிருதச் சொற்கள் உள்ளமையை முகப்பாகக் காட்டி, வடமொழிப்புகுந்த தென்சொற்கள் என 'அக்கம்' முதல் 'வைகை' வரை அகர நிரலில் விரியக் கூறி, தென் சொல் மூலத்திரிசொற்கள், தென்சொல்லடிப் புணர்ப்புச் சொற்கள், மொழிபெயர்ப்புச் சொற்கள் , இருபிறப்பிச் சொற்கள், மயக்கச் சொற்கள், தென்சொல்லை வடசொல்லாக்கிய வகைகள், சுட்டுச் சொற்கள் வினாச் சொற்கள், இடைச்சொற்கள், பலவகைச் சொற் பெருக்கம், இடுகுறிச் சொற்கள், வடசொற்கள் தென் சொற்களால் விளக்கம் பெறுதல், வடவர் காட்டும் வேர்ச்சொற்கள் வேர்ச் சொற்கள் அன்மை என்னும் குறுந்தலைப்பு விளக்கங்களொடு மொழியதிகாரத்தை நிறைவிக்கிறார். சொல்வரிசையில் 665 சொற்கள் இடம் பெற்றுள, வட மொழிப் புகுந்த தென்சொற்கள் என்னும் தலைப்பிட்டு, இடச் சொல் தென் சொல்லும், வலச்சொல் வடசொல்லும் ஆகும்” எனக் குறிப்பெழுதித் தொடர்கின்றார். அக்கம் - அர்க்க, அக்கம் - அக்ஷ என இருவடிவ இருபொருட் பகுப்பில் எழுதப்பட்டிருப்பினும் 'அக்கம்' ஒரு சொல்லாகக் கொண்டு எண்ணப்பட்டதே 665 ஆகும். இவ்வாறே பிறவும். இலக்கண அதிகாரம், வியாகரணம் என்னும் சொல்விளக்கம், எழுத்தியல் (வண்ணமாலை, ஒலியும் பிறப்பும், எழுத்துச் சாரியை, முறை, அளபு, வடிவம், புணர்ச்சி வடமொழி எழுத்துப் பெருக்கம், வடமொழி வண்ணமாலையின் பின்மை அவ்வண்ணமாலையின் ஒழுங்கின்மை, வடமொழிக் குறுங்கணக்கு நூற்பாக்கள் ) சொல்லியல் (பெயர்ச்சொல், இடம், வேற்றுமை, வினைச் சொல், இணைப்பிடைச் சொல், சுட்டும் வினாவும் தொடரியல்) என ஈரியல் களில் ஆய்ந்து நிறைக்கிறார். இலக்கிய அதிகாரம், வேதம் பிராமணம் ஆரணியகமும் உபநிடதமும், வேதாங்கம், வேத சாத்திரம், புராணம், இதிகாசம், ஆகமம் முதலியவற்றைக் குறித்த விளக்கப் பகுதியாகும். நான்காவதாக வரும் தமிழ் மறைப்பதிகாரம் பன்னிரு பக்கங்களையே உடையது. எனினும், சொன்மறைப்பு, சொற் பொருள் மறைப்பு, முதனூல் மறைப்பு, கழகக் கலைப்பு, முன்னூ லழிப்பு, கலை மறைப்பு, அறிவியல் மறைப்பு, தெய் வமறைப்பு, சமய மறைப்பு, கொள்கை மறைப்பு, கருத்து மறைப்பு, ஒழுக்க மறைப்பு, நாகரிக மறைப்பு, பண்பாடு மறைப்பு, கருப்பொருள் மறைப்பு, அறிவு மறைப்பு, மொழி மறைப்பு, எழுத் துமறைப்பு, கழக மறைப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/95&oldid=1431418" இலிருந்து மீள்விக்கப்பட்டது