பக்கம்:தேவநேயம் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொல்லியல் நெறிமுறை பாவாணர் 115 "ஒவ்வொரு சொல்லும் அசையும் எழுத்தும் தோன்றுதற்கும் திரிதற்கும் கெடுதற்கும் நெறிமுறைகள் உள. நான் 1938 - இலேயே 'கீற்று'(Skeel) எழுதிய ஆங்கிலச் சொற் பிறப்பியல் நெறிமுறைகள் (Principiles of English Etymology) இருமடலங்களை (2 Vol)ப்படித்து அவற்றை ஒட்டிச் செந்தமிழ்ச் பிறப்பியல் நெறிமுறைகள் எழுதிவைத்தேன். -- பல்லாண்டிற்குமுன் சொற் மென்றாளில் எழுதப்பட்ட தாதலின் அதன் தாட்கள் பழுப்பேறியும் பூச்சியரித்தும் போய்விட்டன. ஆயினும் இன்று அதனினும் சிறந்த தொன்று தொகுக்க இயலும்... என் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி வெளிவரும் போது, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் தெறிமுறைகளை விளக்கும் மடலமும் விரிவாக வெளிவரும்” என்றார். ஆயினும் வேறு வழிகாட்டவிரும்பிய அவர், "அதற்குமுன் என் தமிழ் வரலாறு என்னும் நூலைப் படித்து ஓரளவு தெரிந்து கொள்க. மேலும் என் வேர்ச்சொற் கட்டுரைகளில் எடுத்துக் காட்டும் சொற்களினின்றே எழுத்தும் சொல்லும் திரியும் முறை களைப் பொது அளவு மதியுள்ள எவரும் அறிந்து கொள்ள இயலும்” என்றும் எழுதினார். 'சொல்வேர்காண் வழிகள்' என்பது பாவாணர் கட்டுரை களுள் ஒன்று. அதில் சொற்பிறப்பியல் நெறிமுறைகளை அறியார் சொல்வேர் காணும் முயற்சியில் ஈடுபடின் ஏற்படும் எழுவகை வழூஉ முடிபுகளை முதற்கண் எழுதி அதன் மேல் 'உண்மைச் சொல்லியல் நெறிமுறைகளும் சொல்வேர் காணும் வழிவகைகளும்' என இருபது குறிப்புகளை வரைந்துள்ளார். ஒவ்வொரு பகுசொற்கும் முதனிலை, ஈறு, இடைநிலை, சாரியை, புணர்ச்சி, திரிபு ஆகிய அறுவகை உறுப்புகளும் அமைந் துள்ளவற்றைப் பகுத்தறியத் தெரிதல், வரலாற்று மொழி நூலறிவும் சொந்த மொழியாராய்ச்சியும் பெற்றிருத்தல்; கீற்று எழுதியுள்ள ஆங்கிலச் சொல்லியல் நெறிமுறைகளையும் அவரும் சேம்பரும் தொகுத்த ஆங்கிலச் சொல்லியல் அகர முதலிகளையும் கற்றுத் தெளிந்திருத்தல், மலையாளம் தெலுங்கு போன்ற அகப்புற மொழிகளையும் மராட்டி இந்தி போன்ற புற மொழிகளையும், ஆங்கிலம் இலத்தீனம் கிரேக்கம் போன்ற புறப்புற மொழிகளையும் ஓரளவு கற்றிருத்தல்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/132&oldid=1431482" இலிருந்து மீள்விக்கப்பட்டது