பக்கம்:தேவநேயம் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 தேவநேயம் தேவநேயம் இருவகை வழக்குகளிலுமுள்ள தமிழ்ச் சொற்களுட் பெரும் பாலனவற்றின் பொருளை அறிந்திருந்திருத்தல்; இற்றைத் தென்பாண்டி நாடாகிய நெல்லை வட்டார நாட்டுப்புற உலக வழக்கை அறிந்திருத்தல்; என்பவை வேண்டும் என்கிறார். மேலும், எழுத்துக்களின் திரிபுகளை அறிதல், சொற்றிரிபு அறிதல், சொற்களின் திருந்திய வடிவறிதல், பலபொருள் ஒருவடிவுச் சொற்களைப் பகுத்தறிதல், சொற்களைச் செவ்வையாய்ப் பிரித்தல், பொருள்களின் சிறப்பியல் பறிதல், பொருள் வரிசையறிதல், ஒப்புமை அமைப்பறிதல், வரலாற்று அறிவையும் ஞால நூல் அறிவையும் துணைக்கொள்ளல், இடுகுறி தமிழில் இல்லை என அறிதல், பகுத்தறிவைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் அஞ்சாமை, நடுநிலை, பொறுமை ஆகிய பண்பு நலங்களும் வேர்ச்சொல் ஆய்வார்க்கு வேண்டும் என்கிறார். ள - ஃ : எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு ள - க : உளி - உகிர், தளை - தகை

உளி - உசி - ஊசி வ. சூசி
தளி - நடி, மகள் - மகடூஉ ண : பெள் - பெண், வள் - வளர் - வணர் ய : தொள் - தொய், மாள் - மாய் - ர : நீள் - நீர், வள் - வார்
கொள் - கொல் ள - ழ : காள் - காழ், துளசி - துழாய் ள -ற : தென் - தெறு - தெற்று, வெள் - வெறு

ள - ன : முளை - முனை, வளை - வனை - இவை எழுத்துக்களின் திரிபு. அரம் (சிவப்பு) - அரத்தம் (சிவப்பு) - அரத்தி - அத்தி = சிவந்த பழம் - இது சொற்றிரிபு இடைகழி - டேழி (கொச்சை) - ரேழி (கொச்சை) - இது சொல் திருந்திய வடிவு மணி = கரியது . மள் - மண் - மணி = நீலக்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/133&oldid=1431484" இலிருந்து மீள்விக்கப்பட்டது