பக்கம்:தேவநேயம் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொல்லியல் நெறிமுறை பாவாணர் 117

வட்டமானது, மள் - முள் - முண்டு - மண் - மணி

நாழிமணி = சிறியது. மள் - மண் - மணி = மணிப்புறா = ஒளியுள்ளது. மண் - மண்ணி -மணி = ஒளிக்கல் - இது பலபொருள் ஒரு வடிவச் சொல். உடக்கெடுத்துப் போதல் = உடக்கு + எடுத்துப்போதல் உடக்கு = உடம்புக் கூடு - இது சொல்லைச் செவ்வையாய்ப் பிரித்தல் இருமை (கருமை) யான மாட்டினம் எருமை வழுவழு வென்றிருக்கும் மரம் வாழை - இவை பொருள்களின் சிறப்பியல்பு அறிதல் அருகுதல் = சிறுத்தல் , ஒடுங்குதல், அரு - அரை = சிறுத்த அல்லது ஒடுங்கிய இடை, உடம்பின் நடு, பாதி. - இது பொருள் வரிசை யறிதல் குழல் - குடல் புழல் - புடல் - இஃது ஒப்புமை அமைப்பு அறிதல் பாண்டி = காளை , மறவன் பாண்டி = பாண்டியன் - இது வரலாற் றறிவையும் ஞால அறிவையும் துணைக்கொள்ளல். சுடலை < சுடல் < சுடு < சுள் - இஃது இடுகுறி தமிழில் இல்லை என அறிதல் வடவை = வடமுனையில் தோன்று நெருப்பு அல்லது ஒளி, - இது பகுத்தறிவைப் பயன்படுத்தல், சொல்லியல் நெறிப்படி உயிர்த்திரிபு, உயிர்மெய்த் திரிபு, மோனைத் திரிபு, எதுகைத் திரிபு எனப் பகுத்துத் தமிழ் வரலாற்றில் வரைகின்றார். சொற்பொருள் வரிசை, பொருட் பாகுபாடு, கல்லும் எல்லும், கலைச் சொல்லாக்கம் என்னும் கட்டுரைகளிலும் எடுத்துரைத்துள்ளார் பாவாணர். ஆதலால் அவர் காட்டும் அறிமுகப்படி நாம் சொல்லியல் நெறி முறைகளை வகுத்துக் கொள்ளலாம். முற்ற எடுத்துக் காட்டல் இம் முகப்புக்குப் பொருந்தாது ஆதலின் எடுத்துக் காட்டாகச் சில நெறிமுறைகளை இவண் காணலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/134&oldid=1431485" இலிருந்து மீள்விக்கப்பட்டது